கற்பனைமடல் 3.
அன்புள்ள அம்மாவிற்கு அன்பு மகன் உங்கள் கடிதத்திற்கு பதில் எழுதும் மடல் இது.நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது தெரிவதில்லை. பணியில் சேர்ந்து ஒருமாதம் போனதே தெரியவில்லை.ஒவ்வொரு நாளும் உங்கள் போன் ,உற்சாக வார்த்தைகள் ,மற்றும் அறிவுரைகள் என்னை ஆழ்ந்து கவர்ந்து விட்டது.பனி மிகவும் பிடித்து விட்டது..ஒவ்வொரு நாளும் விதவிதமான கதைகளை ,முக்கியமாக சிறுவர்களுக்கு ,உருவாக்குவதில் அதிகமாக ,ஈடுபடுகிறேன்.நல்ல ,பழக்கவழக்கங்கள் ,தேசப்பற்று ,இவைகளை மையமாக வைத்து ஒரு சிறுகதை செய்துள்ளேன்.எனது மேல் ஆசிரியர் மிகவும் பாராட்டினார்..உங்கள் ஆசீர்வாதம்,மற்றும் உற்சாகமான வார்த்தைகள் தான் இதற்கு காரணம் என்று சொல்லி மடலை முடிக்கிறேன்.உங்கள் போன் ,நாளை எதிர் பார்க்கிறேன் .உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களை என்றும் மறவாத அன்பு மகன்
No comments:
Post a Comment