Sunday, December 12, 2021

Tribute to Nadigar Thilagam Sivajiganesan . 691.

இன்று நான் பாராட்ட போகின்ற மனிதர் இந்திய ,திரையுலகில் மிக பெரிய சாதனைசெய்தவர்,பல அரிய பட்டங்களை பெற்றவர்,மக்களின் மனதில் தன சிம்மக்குரலால் கர்ஜித்து ,நீங்காத இடம் பெற்றவர்.நடிப்பு உலகில் இமயம் போன்ற சாதனை புரிந்தவர்.நாடக துறை மூலம் ,திரையுலகில் காலடி வைத்து தன்னுடைய ,பல வேறு பட்ட ,பாத்திரங்கள் மூலமாக ,,இந்தியமண்ணிற்கு பெருமை தேடி தந்தவர். எந்த கதா பாத்திரமாக இருந்தாலும் அந்த பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர்,நவரச பாத்திரங்களில் தன நடிப்பு முத்திரையை பதித்தவர்,இவரைப்பற்றி எண்ணிலடங்கா ,கட்டுரைகளும்,விமர்சனங்களும் ,கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக,,வந்து மக்களின் மனதில் ,என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது,இருந்தாலும் ,எனது திருப்திக்கு ,எனது ,பதிப்புகளில் பதிய ,இன்று என் மனம் உவகையில் ,பொங்க இன்று நான் ,இந்த மா பெரும் கலை மேதை மறைந்த நடிகர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி எனக்கு தெரிந்த ,விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நடிப்பில் இவர் இமயம் ,உள்ளத்திலும் உயர்ந்தமனிதன்,,சகோதர பாசத்தில் பாசமலர்,மறைந்த முதல்வர் கலைஞரின் வசனங்களை ,கனல் பறக்க பேசி ,புதியசாதனை செய்தவர்,பராசக்தி,மனோகரா ,போன்ற படங்கள் இன்றும் மக்களிடை வரவேற்புப்பெற்றுள்ளது..அவர் நடித்த அணைத்து படங்களும் அருமை.என்னால் எல்லா படங்களையும் நினைவு கூற முடியவில்லை..இருப்பினும் சில படங்களை எண்ணிப்பார்க்கிறேன்..பாசமலர்,உயர்ந்தமனிதன்,வியட் ட்நாம்வீடு, வீரபாண்டிய கட்டபொம்மன்,,திருவிளையாடல்,பாவமன்னிப்பு,பதிபக்தி ,பலே பாண்டியா அன்னைஇல்லம் ,எங்கஊர் ,ராஜா,.விடிவெள்ளி,நெஞ்சிருக்கும் வரை,உத்தமபுத்திரன்,ராமன் எத்னைரமானடி,சவாலே சமாளி,வசந்தமாளிகை,புத்திப்பறவை,பார்மகளே பார், இருவருள்ளம்,தூக்குத்தூக்கி.தில்லானாமோகனாம்பாள் ,மற்றும் பலபடங்கள் நினைவிற்கு வரவில்லை.இவர் நடிக்காத பட ஸ்தாபனங்களே இல்லை என்றுசொல்லலாம்,ஏவிஎம்,ஜெமினி, முக்தா பிலிம்ஸ்,மற்றும் பல ஸ்தாபனங்களில் பங்கேற்றவர்.இனிமையாக பழகக்கூடியவர்,இன்றைய இளைய தலை முறைகளுக்கு வழிகாட்டியவர்,இயக்குனர்கல் அனைவர்க்கும் பிடித்த தலை சிறந்த நடிகர் ,இன்று நம்மிடை இல்லை.அவர் நடித்த படங்களும் ,அவரின் சிம்மக்குரலும் இன்றும் நம் காதுகளில் ரீங்காரம் இட்டுகொண்டுஇருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.தந்தையைப்போல அவர் மகன்கள் ராம்குமார்,பிரபு,மற்றும் பேரன் விக்ரம் பிரபு அவர் பாதையை பின்பற்றி வெற்றிநடை போடுகிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.சமீபத்தில் முக்தா பிலிம்ஸ் இந்த கலைஞருக்கு தங்கள் 60 ஆண்டு விழாவில் ,இவரை கௌரவித்தது விழா நடத்தியது இவர் மேல் இருந்த நட்பு ,மரியாதையை ,எடுத்து காட்டுகிறது.ஒரு ஒப்பற்ற கலைஞன் சிம்மக்குரலோன் இன்று நம்மிடையில்லை.அவர் படங்களும் ,நடிப்பும் நம்மிடை இன்னும் இருக்கிறது ,தொடர்ந்து இருக்கும் என்று குறி ,எனக்கு தெரிந்த சிற்றறிவில் இதை இன்று பதிவு செய்துள்ளேன்.குறைகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். கே.ராகவன். 13-12-21. see you next week www.ragavan-creativity.blogspot.com write2ragavan.wordpress.com www.tumblr.com commonman ,

No comments: