Sunday, February 19, 2023
Tribute to Father’s Friend Sundaram.
February 19, 2023
இந்த பாராட்டு பதிவு என் தந்தையின் அருமை நண்பர் சுந்தரம் அவர்களுக்கு.
இந்த சம்பவம் சுமார் அறுபத்திஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்து இருந்தாலும் இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது. அப்போது நான் மதுரையில் ஸ்கூலில் படித்துகொண்டிருந்தேன் .என் பெற்றோர்கள் சென்னைக்கு நிரந்தரமாக குடி புகுந்து ,என்னை என் மாமா வீட்டில் ஒருவருடம் ஸ்கூலிற்காக விட்டு சென்றார்கள்.மாமாவின் அன்பு பராமரிப்பில் நான் என் ஸ்கூல் சென்று வந்தேன்.ஒரு நாள் சாயங்காலம் ,வெளியே வாக்கிங் போகும் போதுஎன்னை ஒரு விளம்பர பேனர் கவர்ந்தது.அது குணசுந்தரி என்ற தமிழ் படம் .அதன் அடியில் ராஜஸ்ரீ ரிலீஸ் என்று எழுதியிருந்தது.உடனே என் தந்தையின் நண்பர் சுந்தரம் அவர்களின் நினைவு வந்தது.அவர் அந்த நிறுவனத்தில் சென்னை மவுண்ட் ரோடு ஆஃபிஸில் பெரிய பதவி வகித்து வந்தார்.நான் எனக்கு தெரிந்தவர்கள் உதவியுடன் ,அந்த ஆபீஸ் அடட்ரெஸ்ஸை கண்டுபிடித்து ஒரு தபால் கார்டு ,மூலம் ,என்னை பற்றி விவரமாக ,நான் அவருடைய நண்பர் சாரி மகன் என்றும் ,குணசுந்தரி படம் நண்பர்களுடன் ,பார்க்க ஆசையாக இருப்பதாகவும்,அந்த படம் நியூ சினிமாவில் நடந்து கொண்டுஇருப்பதால் எனக்கு நாலு பெயருக்கு பாஸ் அனுப்ப முடியுமா மாமா என்று என் ஸ்கூல் எம் .சி.ஹை ஸ்கூல் அட்ரஸ் ,வகுப்பு எல்லாவற்றையும் விவரமாக எழுதி
அனுப்பிவிட்டேன்.இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களில் கடைசி வகுப்பு நடக்கும் போது ,என்னை தேடி ஒருவர் என் வகுப்பிற்கு வந்து
ஆசிரியரிடம் என்னை விசாரித்தார்.ஆசிரியர் என்னை அவரிடம்
அனுப்பி என்ன என்று கேள் என்று சொன்னார்.நான் அவரிடம் யார் நீங்கள் ,என்று கேட்க அவர் சொன்ன பதில் என்னை வியப்பில்
ஆழ்த்தியது.நான் மதுரை ஆபீஸ் ராஜஸ்ரீ பிலிம்ஸ் இல் இருந்து
வருகிறேன்.எங்கள் ஜெனரல் மேனேஜர் சுந்தரம் அவர்கள் இந்த
பாசை உன்னிடம் கொடுத்து குணசுந்தரி படத்தை உன்
நண்பர்களுடன் பார்க்க சொல்லி கொடுத்து என்னை
அனுப்பியிருக்கிறார்.நீ அவர் நண்பர் சாரி மகன். தானே .நானும் ஆமாம் என்று சொல்லி அவர் கொடுத்த பாஸ் பெற்றுக்கொண்டு
,சுந்தரம் மாமாவுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லுங்கள்.என்
பெயர் ஜெமினி என்றால் தான் அவருக்கு உடனே புரியும் என்று
ஆனந்த கண்ணீர் சிந்தினேன் .எதற்கு இந்த சம்பவத்தை இங்கு பகிர்ந்தேன் என்றால் இது மதுரை வீரன் குரூப்.இந்த சம்பவம் நடக்கும் போது எனக்கு 12 வயது.இன்றும் நியூ சினிமா,மற்றும் மாப்பிளை விநாயகர் ,என் கண் முன்னால் நிற்கிறது.இன்று சுந்தரம் என்ற மாமனிதர் அவர் நண்பர் மகன் எழுதிய தபால் கார்டு மூலம்
அவன் விருப்பத்தை அறிந்து பாஸ் அனுப்பியது அவரின் உயர்ந்த
குணத்தையும் என்தந்தையின் மீது அவர் வைத்துஇருந்த மதிப்பையும் ,நட்பையும் காட்டுகிறது.மதுரை வீரன்ஸ் குரூப்பில் சேர்ந்தவுடன்
இன்று இவர் ஞாபகம் வந்தது.இதில் பிழை இருந்தால் பொருட்படுத்தவேண்டாம்.என் மாமாவிடம் இதை சொன்னவுடன் ஒரு சின்ன பையன் எழுதிய கார்டிற்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து உனக்கு இதை அனுப்பிய அப்பா நண்பர் உண்மையிலையே கிரேட் என்று சொன்னார்.அறுபத்திஐந்து வருடங்கள் ஆனாலும் மறக்க கூடிய சம்பவமா இது ?
அன்புடன்
கே.ராகவன்
20-2-23
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment