Thursday, April 13, 2023
Tamil New Year’s Day.
நாளைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)
இந்த வருஷத்துக்கான பாடல்
ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது
கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்
தமிழ் சூரியன் அசுவினி நட்சத்திர முதல் பாதத்தில் நுழையும் நாளில் இருந்து கணக்கிடப் படும்
இது சூரியன் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சௌரமானம் எனப்படும்
கன்னட தெலுங்கு வருஷபிறப்பு சந்திரன் சஞ்சாரப்படி பங்குனி அமாவாசை மறுநாளிலிருந்து சைத்ரமாதம் என கணக்கிடப்படும் அதாவதுஇது சாந்திரமானம்
இரண்டுக்கும் மிக பெரிய வேறுபாடில்லை
இந்தசோபக்ருது வருஷம் பொதுவாக எல்லோருக்குமே எல்லா நன்மைகளையும் பெற்று தரப் போகிறது
சோபக்ருது தன்னிற் றொல்லுவகெல்லாம் செழிக்கும்
கோபம் அகன்று குணம் பெருகும் சோபனங்கள் உண்டாகு மாரி யொழியாமற் பெய்யு
மெல்லாம் உண்டாகுமென்றே உரை
சோபக்ருது வருடத்தில் உலகிலுள்ள பழம் பெரும் ஊர்களெல்லாம் சிறப்புறும் கோபம் பொறாமை நீங்கும் ஒற்றுமை மேலோங்கும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மழை பெய்யும் எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் என்கிறது
ஆக சுபே சோபனே என்பது போல் சுபம் முடிந்து சோபனம் ஆரம்பமாகிறது
இந்த சோபன வருஷத்தில்
சித்திரையைச் சீராக்கி
வைகாசியை வசந்தமாக்கி
ஆனியை ஆனந்தமாக்கி
ஆடியை ஆரோக்கியமாக்கி
ஆவணியை ஆசீர்வாதமாக்கி
புரட்டாசியைப் புனிதமாக்கி
ஐப்பசியை அற்புதமாக்கி
கார்த்திகையைக் காருண்யமாக்கி
மார்கழியை மாண்பாக்கி
தையைத் தைரியமாக்கி
மாசியை மாணிக்கமாக்கி
பங்குனியைப் பக்குவமாக்கி
வாழ்வில் ஒவ்வொருவரும் பல வளங்களை பெற்று உய்ய வேணுமாய் பிரார்த்திக்கிறோம்
நாளைய தினம் இல்லத்துக்கு சோபக்ருது என்ற புது நங்கை வருகிறாள் அவளின் வருகையை வரவேற்க்கும் விதமாக
இன்று இரவு பெருமாள் சன்னதியில் பழங்கள் பணம் நகைகள் அரிசி பருப்பு வெல்லம் பணம் என ஒரு கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து நாளை காலையில் எழுந்து ஹரி ஸ்மரணம் செய்தபடிக்கே பூமாதேவியை வணங்கி உள்ளங்கையை பார்த்து பிரார்த்தித்து படுக்கையில் இருந்து கண்ணை மூடியபடியே எழுந்து அப்படியே பகவத் சன்னதி சென்று பகவானை வணங்கி அவர் முன் வைத்த பொருட்களை கண்டு ஆனந்தித்த படியாக நல்லவைகளை நினைத்து கொண்டே
அவளை இன்முகம் கூறு வாழ்த்தி வரவேற்போம்
அன்பர்களே உங்கள் *அனைவருக்கும் நம் இனிய சோபக்ருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்* வணக்கங்கள்
ஜெய் ஶ்ரீராம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment