Friday, March 22, 2024
Permanent God.
Which is Permanent.
நிரந்தரம் எது
இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை ..நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் இது தான் நிரந்தரம் என்று ஆனால் அது இல்லை. நேற்று இருந்த சக்தி இன்று இல்லை ,நேற்று இருந்த அழகு இன்று இல்லை ,நேற்று இருந்த பண பலம் சிலருக்கு இன்று இல்லை ,நேற்று சாதாரண மாக இருந்த வர்கள் இன்று பெரிய செல்வந்தர்களாக மாறி விடுகிறார்கள். ஒரு பெரிய நகரத்திற்கு நாம் சென்று அங்கு இருக்கும் வீடுகளையும் ,அதன் அமைப்புகளையும் பார்த்து வியக்கும் பொது அடுத்த வீடுகளை பார்க்கும் போது பழைய வீடுகள் நினைவு மறந்து விடுகிறது. நேற்று இருந்த நட்பு இன்று இல்லை ,புதிய நட்புகள் தோன்றுகிறது.நேற்று அடங்காமல் இருந்தவர்கள் இன்று அடக்கத்துடன் இருக்கிறார்கள்.இப்படி அடுக்கிகொண்டே போனால் எதுவும் நிரந்தரம் இல்லை. இதை நாம் உணர்வதில்லை .இதுதான் நிரந்தரம் என்னும் நம் எண்ணத்தை நாம் நிரந்தரமாக கைவிடவேண்டும் .இன்றும் என்றும் நிரந்தரமாக எல்லோராலும் நினைப்பவன் இறைவன் ஒருவனே..
கே.ராகவன்.
டென்வர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment