Sunday, May 26, 2024

Tribute 819.

திரைப்பட துறைக்கு அஞ்சலி819 ஒரு பாமர மனிதனின் சந்தோசம் சில துறைகளில் ,நாட்டம் கொண்டு நேரத்தை செலவிடுகிறார்.அந்த துறையில் திரைப்பட துறையும் ஒன்று பெரும்பாண்மையான மக்களால் செலவிடுபடுகிறது என்பதில் வியப்பில்லை.எனக்கு தெரிந்த வரை 60 வருடங்களுக்கு மேலாக இந்த துறை சிறப்பாக எல்லா மொழிகளிலும் ,சிறந்த கலைஞர்களால் செயல் பட்டு வருகிறது என்றால் வியப்பில்லை.ஒரு படத்தின் முக்கியமான உயிர் நாடி கதை ,திரைக்கதை .அது சிறப்பாக அமைந்து விட்டால் ,ஒரு நல்ல தயாரிப்பாளர் முன்வந்து,நடிகர் ,நடிகைகள் தேர்வு செய்து சிறந்த இயக்குனர் மூலமாக தொழில் நுட்ப கலைஞர்களுடன் படம் வெளி வருகிறது.மக்கள் அதை அங்கீகரிக்கிறார்கள்.அவர்கள் கொடுக்குகும் ,தீர்ப்பு கலைஞர்களை உயரவைக்கிறது.இன்று இந்த துறைக்கு அமோக வரவேற்பு இருப்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.படித்த பட்டதாரி ,இளைஞர்கள்,திரைப்பட கல்லூரியிலும் ,படித்து தங்களுக்கு .விருப்பமான தொழிலை விரும்புகிறார்கள்.முக்கியமாக,இன்று ,இயக்குனர்,எடிட்டர்,ஒளிப்பதிவாளர்,நடிப்பு,மற்றும் மற்ற துறைகளிலும் ,ஆர்வமாக வருகிறார்கள் என்றால் இந்த துறையின் மீது கொண்டுள்ள ஆர்வத்தினால்.இன்று இந்த துறையில் ,வாய்ப்புகள் அதிகமாக பெருகிவருகிறது.காரணம் எல்லா மொழிபடங்களும் ,பிற மொழிகளில் விளக்கப்படுவது.உலகம் பூராவும் இந்த துறை ,விரும்பப்படுகிறது.வீட்டில் பெண்களின் பொழுது போக்கு ,டிவி மற்றும் பெரியவர்கள் ,நல்ல திரை வரவேண்டும்.வன்முறை,கவர்ச்சி ,தவிர்க்கப்படவேண்டும்.சிருங்கார காட்சிகள் ,விரசமில்லாமல் ,எல்லோரும் பார்க்கும் படி எடுக்கவேண்டும்.பொருளாதார ரீதி படங்கள் அதிக பட்ஜெட்டில் வருவதை நான் விரும்புகிறேன்.அதே சமயத்தில் நம் பண்பாடு,கலாச்சாரத்திற்கு ,பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.திரை பட துறை ஒரு நல்ல பொழுது போக்கு சாதனம்,மக்கள் பொழுது போக்கு சாதனமாக ஏற்றுக்கொண்டு,கலைகர்களுக்கு ,அவர்களின் திறமைக்கு மதிப்பு கொடுத்து பாராட்டு வதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். கொண்டாடக்கூடாது.கடவுளாக கொண்டாடக்கூடாது.ஒவ்வொரு கலைஞனையும் அவர்களின் திறமைக்கு ,நான் எப்போதும் பாராட்டுவேன்.இந்த வாரம் என் வலை தலத்தில் இந்த பதிவை பதிவு செய்கிறேன். கே.ராகவன். மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும் வரை, 27-5-24.

No comments: