Tuesday, December 5, 2023

Story.

எங்கிருந்தோ வந்தான் மழை சற்று ஓய ஆரம்பித்தது.உள்ளே பெருமாள் விளக்கை சற்று நிமிண்டிவிட்டு கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் ஜானகி.வாசலில் யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டு மெதுவாக எழுந்தாள்.வாசல் படி வந்தவள் முகத்தை பார்த்து யார் என்றுகண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் வீட்டில் இருக்கும் கணவரும் கடைக்கு போயிருப்பதால் அவள் யார் ,நீங்க என்று கொண்டிருக்கும் அந்த நபரை பார்த்து கேட்டாள் .அதற்கு அவர் ,அம்மா ,என் பெயர் பிச்சை ஏதாவது சாப்பிட கிடைக்குமா .ஜானகி அந்த மனிதரை பார்த்து ,இவ்வளவு வாட்ட சட்டமாக இருக்கிறீர்களே வேலைக்கு போகலையா என்று கேட்க பிச்சை ,அம்மா நான் தினம் மூட்டை தூக்கி பிழைக்கிறேன். இப்போ ஆறு மாதமாக கரோனா இருப்பதால் எனக்கு எங்கயும் வேலை கிடைக்கவில்லை .ஜானகி ,என்னை மன்னிச்சுடுங்கோ .இப்போ நான் உங்களுக்கு உப்புமா கொண்டு வருகிறேன் .ஜானகி உப்புமா கூட சக்கரையும் கொன்டு வந்து அவரிடம் கொடுத்தால்.உப்புமா சாப்பிடும் பொது பிச்சை ,அம்மா நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள். ஆமாம் ,நானும் என் கணவரும் இப்போ தனியாக இருக்கிறோம் .எங்களுக்கு ஒரு பிள்ளை அவன் மிலிட்டரியில் மேஜர் போன வாரம் கொரோனாவில் போய்விட்டான் .. எங்களால் போக முடியவில்லை. அது போக இவருக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் . பணம் இல்ல .ஒரு நண்பரிடம்போய் கடன் வாங்கிண்டு வரேன் என்று போயிருக்கிறார்..எனக்கு இஷ்டம் இல்லை.எங்களால் கடன் வாங்கினால் திருப்பிக்கொடுக்கமுடியாது அவர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் எங்களுக்கு பென்ஷன் ஒன்றும் வராது.இருக்கும் பணத்தில் பேங்க் வட்டி வாயுக்கும் வயதுக்கும் பொரளை.எங்கள் பெருமாள் உப்பிலியப்பன் தான் எதாவது வழி காட்டணும்னு தினம் இந்த வேளைக்கு பாதுகாசஹஸ்ரம் சொல்லுவேன் இப்போ உக்காரும் பொது நீங்கள் வந்து கேட்டவுடன் எங்கள் கஷ்டம் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது.இன்னும் உப்புமா கொடுக்கட்டுமா .வேண்டாம் அம்மாஇதுவேய எனக்கு ரொம்ப ஜாஸ்தி. அதற்குள் அவள் கணவர் வந்துவிட்டார் .போன காரியம் என்ன ஆச்சு கணவர்,நண்பன் ஊரில் இல்லை இது யார்..ஜானகி எல்லா விவரமும் சொன்னாள் .அதை கேட்ட கணவர் உங்களுக்கு ஆறு மாதமாகவா வேலை இல்ல .நாளைக்கும் இங்கு வந்து சாப்பிடுங்கோ.பிச்சை ,உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி நான் போயிடு வருகிறேன்.நீங்கள் பாதுகாசஹஸ்ரம் சொல்லுங்கோ மாமி என்று வாசல் வரை போய்வந்தவர் ,அம்மா இந்த பை கொஞ்சம் அழுக்காக இருக்கிறது இதை தட்டி சுத்தம் பண்ணி உங்களிடம் வைத்து கொள்ளுங்கோ,நான் இந்த பக்கம் வரும் பொது வாங்கிக்கிறேன் என்று சொல்லி பையை கொடுத்துவிட்டு போய்விட்டார். பாதுகாசஹஸ்ரம் சேவித்து விட்டு ஜானகி அந்த பையை எடுத்து தட்டி பெருமாள் கிட்ட காட்டி ,பாவம் அந்த பிச்சைக்கு இதை துவைக்கக்கூட முடியவில்லை. என்று நன்றாக உதறினாள். என்ன ஆச்சர்யம் , கற்றையாக ரூபாய் நோட்டுகள் கொட்ட ஆரம்பித்தது.இருவருக்கும் ஆச்சார்யம் .வந்தது யார் என்று இப்போ அவர்களுக்கு புரிந்து விட்டது. இந்த கலி காலத்திலும் நீ நேரில் வந்து உன் கருணையிய காட்டுகிறாய் அப்பா என்று அவர்கள் இருவர் கண்ணிலும் நீர் சொரிந்தது.பிள்ளையை பறிகொடுத்துவிட்டு ,கண் அப்பொரேஷனுக்கு தவித்து கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஆண்டவன் எப்படி கருணை காட்டி விட்டான்..ஜானகி மெய்சிலிர்த்து போனாள் .தான் தினம் செவிக்கும் பாதுகா சகஸ்ரத்தின் மஹிமையை நினைத்து. எங்கிருந்தோ வந்தவன் அவர்கள் மனா பாரத்தை இறக்கிவிட்டு போய்விட்டான். கே.ராகவன்

No comments: