Monday, October 18, 2021
Letter to my Friend Director Selva Kumar.
அன்பு நண்பர் செல்வா அவர்களுக்கு நீங்கள் துணைவியார் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.இங்கு நானும் என் குடும்பத்தார் அனைவரும் நலம்.உங்கள் படம் யாதொன்று கேட்டேன் அமோக வெற்றியடையும் என வயதில் மூத்தவனான நான் மனதார ஆசிர்வதிக்கிறேன்.மறைந்த கவியரசு கண்ணதாசனின் பாடல் வரியை கருவாக கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளீர்கள் .மிக்க மகிழ்ச்சி.
உங்கள் தந்தையரின் புத்தகமும் சிறப்பாக வரும்.உங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் முக்கியமாக எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவாளர் ,யார் என அறிய ஆவல்.கடந்த 13 வருடங்களாக என் ப்லோக்ஸ் இல் பாராட்டு என்ற பதிவில் யார் தங்கள் துறைகளில் சாதனை பண்ணியிருக்கிறார்களோ அவர்களை பற்றி பதிவு செய்து வருகிறேன்..ஐபோன் இல் உடனே பதில் என்னால் ஆங்கிலத்தில் தான் செய்ய முடியும் எனக்கு தமிழில் பதில் அளிக்கவேண்டும் என்ற ஆவல் தான் .உங்கள் கன்னி முயற்சி அமோக வெற்றி அடையும் என்று கூறி இந்த மடலை நிறைவு பெற செய்கிறேன் அன்புடன் என்றும்
நண்பன் ராகவன் பெங்களூரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment