Monday, July 11, 2022

Ponniin selvan.

பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பு . கடந்த சில நாட்களாக மறைந்த கல்கி அவர்களின் ,மாபெரும் படைப்பு ,பொன்னின் செல்வனை உருவாக்கியும் ,இயக்கியும் ஒரு மாபெரும் ,நட்சத்திர பட்டாளத்தை ,அறிமுகப்படுத்தி நம்மை பெரிய வியப்பில் ,ஆழ்த்தப்போகின்ற இயக்குனர் மணிரத்தினம் ,தன்னுடைய கதாபாத்திரங்களை , பத்திரிகைகள் மூலமாக தினம் காண்பிக்கும் போது ,நாம் அனைவரும் அந்த காலத்திற்கே போவதுபோல் இருக்கிறது.கல்கியின் படைப்பை ,செவ்வனே தன முத்திரை மூலமாக ,ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ,திறமையான எடிட்டர் சுரேஷ் அர்ஸ் ,மற்றும் பல திறமையான கலைஞர்களுடன் ,ஆங்கில படத்திற்கும் ,மேலாக தொழில் நட்பாம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.இயக்குனர் ,பல மாபெரும் வெற்றிப்படங்களை தந்த மணிரத்தினம் ,நம்மை வியப்பில் தான் ஆழ்த்துவார் .மேலும் இந்த படத்தில் உரையாடல்கள் அந்த ,காலத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும்.இந்த மாபெரும் முயற்சிக்கு ,மணிரத்தினத்தை பல முறை பாராட்டினாலும் தகும். அன்புடன் கே.ராகவன்.

No comments: