Friday, November 14, 2014

My Comment in Thendral Magazine USA

My Comment in Thendral Magazine USA.ஏன் இந்த அவல நிலை ?
கடந்த சில மாதங்களாக மனிதன் மிருகத்தை விட கொடியவனாக மாறிவிட்டதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.தினம்தோறும் காலையில் பேப்பர் பார்க்கும்போது நம் கண்களுக்கு தெரிவது கற்பழிப்பு ஒன்று தான். மிககொடுமை சிறு குழந்தைகள் 3 வயது லிருந்து ஆரம்பம் 
ஆகிறகொடுமை .ஏன் மனிதன் இப்படி பேதலித்து குழந்தைகள் என்றும் பாராமல் மிருகங்களை விட கொடியவனாக மாறிவிட்டான்,?அரசாங்கம் இந்த விசயத்தில் மிகவும் மெத்தனமாக செயல் புரிகிறது .நீதி துறை மெதுவாக நீதி வழங்குகிறது.அந்த காலத்திற்குள் மேலும் பல குழந்தைகள் ,பெண்கள் கற்பு பறிபோகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயபடுகிரர்கள் . அரசாங்கம் சட்டத்தை திருத்தி அமைத்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்கள் கொடுக்கும் தண்டனை மீண்டும் இந்த செயல் செய்ய மற்றவர்களை தூண்டாமல் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை மனம் மாறாமல் செய்யவேண்டும்.நல்ல சிந்தனைகளையும் ,எண்ணங்களையும் மாணவர்கள் மேல் செலுத்த வேண்டும்.எல்லா ஆசிரியர்களும் மனம் மாறி நடக்க மாட்டார்கள். இது குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலை.
குடும்ப கட்டுப்பாடு என்ற பெயரில் நடந்த பெண்களின் இழப்பு ,மருத்துவர்களின் ,அலட்சிய போக்கு இது சத்தீஸ்கரின் அவல நிலை?
இந்தியா முதல் பிரதமர் நேரு வின் 125 ஆண்டு விழாவிற்கு இன்றைய
பிரதமருக்கு அழைப்பு அனுப்பாதது அரசியல் அவல நிலை .
மறந்த கவிஞர் கண்ணதாசனின் பாடல் எனக்கு நினைவு வருகிறது. மனிதன் மதத்தில் ஏறி விட்டான் அன்று இன்று மனிதன் மிருகமாக மாறிவிட்டான்..இந்த அவல நிலை நீங்க தூய்மையான எண்ணம் வேண்டும் நல்ல சிந்தனை ,இறை வழிபாடு வேண்டும் .மற்றவர்களை
அன்புடன் . வேறு பாடின்றி பார்க்க வேண்டும்.மிருகத்தனமான எண்ணங்கள் இதன் மூலம் மாறலாம் .இது என் கருத்து
கே.ராகவன்

No comments: