Wednesday, November 9, 2022

Good Meeting.

அனைவர்க்கும் எனது பணிவான வணக்கம். இன்று உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் அவரை பாராட்டி ,பல சிறந்த பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ,பங்கு பெறுகிறார்கள் .இதற்கு மூல காரணமாக இருந்த முக்தா பிலிம்ஸ் என்கின்றமா பெரும் நிறுவனத்தின் ,பொறுப்பிலிருக்கும் ,நண்பர் ரவி,சகோதரி மாயா ,மற்றும் சுந்தர் அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். களத்தூர் கண்ணம்மா திரை படத்தின் மூலம் திரை உலக களத்தில் ஆரம்பித்து ,பதினாறு வயதில் தன நடிப்பு முத்திரையை பதித்து ,அடுத்தடுத்து பல படங்களில் தன பெயரை தக்க வைத்த கமல் என்னும் மாபெரும் நடிகனை பாராட்டுகிறேன்.அவர் நடித்த எல்லா படங்களுமே அருமை.எனக்கு பிடித்த சில படங்களை ,இந்த சமயத்தில் நான் இங்கு பதிய விருப்பப்படுகிறேன்.அவர்கள்,உன்னால்முடியும் தம்பி,வறுமையின் நிறம் சிவப்பு,மரோசரித்ரா,சிகப்பு ரோஜாக்கள்,அவ்வை ஷண்முகி,மைகேல் மதன காமராஜன்,அபூர்வசகோதரர்கள்,ராஜபார்வை,தசாவதாரம்,புன்னகைமன்னன்,மூன்றாம் பிறை,இந்தியன்,தெனலி ,பஞ்சதந்திரம்,வசூல்ராஜா,வேட்டையாடுவிளையாடு மற்றும் அநேக படங்கள் நினைவில் வரவில்லை .ஒரு மாபெரும் கலைஞன்,இயக்குனர் மற்றும் பல திறமைகளை தனக்குள் வைத்து இருக்கும் இந்த மனிதருக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முக்தா ஸ்தாபனத்திற்கு ,நன்றி சொல்ல விரும்புகிறேன்.கடைசியாக திரையுலகம் இந்த ம பெரும் கலைஞனை தன்னுள் வைத்து இருப்பதற்கு ,பெருமிதம் அடைய வேண்டும். அன்புடன் கே.ராகவன் பெங்களூரு.

No comments: