Sunday, June 2, 2024

Tribute 820.

ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களின் சாதனைகளுக்கு உரிய பாராட்டுகள். சாதனை என்பது அளவில் இல்லை. அது ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு தவணையிலும் முன்னேறி, பின்னாளில் சிறந்த மனிதனாக அவரவர்களின் தொழில்களில் தோன்றுவதுதான் எனது கருத்து. ஒரு நபர் எந்த தொழிலிலும் இருந்தாலும், ஊக்கம், விடா முயற்சி மற்றும் அதற்கான ஆர்வம் இருந்தால், அவர் சாதனை செய்வார் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு, மேலும் இது என் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களை பார்த்து நல்ல குணங்களை கற்று கொள்ள தவறில்லை. பல நபர்கள் சிறு வயதில் படிக்க வசதியின்மையிலும், சிரமங்கள் இன்றி, பின்னாளில் மிக உயர்ந்த நிலைக்கு எட்டியுள்ளார்கள். எனது எழுத்துத் துறையில், நான் பிற பிரபல எழுத்தாளர்களைப் பின்பற்றி, என் அறுபது வருட பயணத்தை தொடர்ந்துவருகிறேன் என்பதனை பெருமையாக கூற விரும்புகிறேன். அவர்கள் ஆர்.கே.நாராயணன், ராகி.ரங்கராஜன், சுஜாதா, அகிலன், ந.பார்த்தசாரதி, சாவி, தேவன், கடுகு மற்றும் பலர். எல்லோருக்கும் சன்மானம் மற்றும் விருதுகள் கிடைப்பதில்லை. ஆனால், எந்த தொழிலிலும் இருக்கின்ற நிலையில், தனி நபர்கள் தங்களுடைய குறிக்கோள்களை கடைப்பிடித்து, தங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்திருப்பது அவசியம். இன்று, நான் குறிப்பாக பாராட்டும் இந்த தனிநபர்களுக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். முயற்சி இல்லாதவர் thotrathuillai அவர்கள் வெற்றி பெறுவது உறுதி, மற்றவர்கள் அவர்களை அங்கீகரித்தாலும் சரி, இல்லையெனிலும். இன்று, இந்த நபர்களைப் பற்றிய என் கருத்துக்களை என் வலைதளங்களில் பகிர விரும்புகிறேன். அன்புடன், கே.ராகவன் (3-6-24)

No comments: