Friday, June 12, 2020

AmericaPeran.

அமெரிக்கா பேரன்
காலையில் எல்லா வேலைகளையும் முக்கியமாக பெருமாள் சேவித்துவிட்டு ஹாலில் சோபாவில் வந்து உட்கார்ந்தாள் பங்கஜம்.பெருமாள் சேவித்தாலே மனம்குதூகலிக்கிறது உண்மைதான்.அனுபவப்பூர்வமாக பார்த்தவள் பங்கஜம்.கையில் வைத்திருந்த கணினி சாதனத்தில் அன்று என்ன மெயில் வந்திருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தாள்.முதல் மெயில் பார்த்தவுடன் மனம் உவகையில் துள்ள ஆரம்பித்தது.பேரன் வேங்கட நாதன் மெயில் பார்த்து அதில் இருந்த விஷயத்தை படித்து சந்தோஷப்பட்டாள். பேரன் மீது அளவு கடந்த பாசம் ,ஆசை,. அவன் கேட்ட லிஸிட்டில் இருந்த சாமான்களை பார்த்தவுடன் உடனே சமையல் அறைக்கு போய் செய்ய கால் பரபரத்தது.அவனுக்கு பிடித்த ஸ்வீட்ஸ் ,காரம் எல்லாம் செய்து கோரியரில் அனுப்பவேண்டும்.
இன்று முடிந்தால் பண்ணவேண்டும் என்று எண்ணம் வந்தவளுக்கு மாலை கிளாஸ் இருப்பது ஞாபகம் வந்தது.நாளை செய்யலாம் என்று மனதை மாற்றிக்கொண்டாள்.  . பங்கஜம் மற்றும் அவள் கணவர் ரங்கராஜன் இருவரும் ஸ்ரீரங்கத்தில் தனியாகவசித்துவருகிறார்கள். கணவர் பேங்க் இல் இருந்து ஓய்வு பெற்று ஸ்ரீரங்கத்தை தன இறுதி நாட்களுக்கு தேர்ந்து எடுத்து அங்கேயேய்ஒரு  வீடு கட்டிக்கொண்டு வந்து விட்டார்கள்.ஒரேயபிள்ளை அமெரிக்காவில் டென்வரில் செட்டில் ஆகிவிட்டான்.ஒரு பிள்ளை அவனுக்கு.வருடத்திற்கு1 முறை பேரன் மாத்திரம் வந்து ஒருமாதம் தாத்தா பாட்டியுடன் வந்து இருப்பான்.பிள்ளை ,மருமகள் 2 வருடத்திற்கு ஒருமுறை வருவார்கள்.பங்கஜமும் அவர் கணவரும் இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை டென்வர் போவார்கள்.மொத்தத்தில் நல்ல பாசத்துடன் பழகும் குடும்பம்.பேரனுக்கு தாத்தா பாட்டி என்றால் உயிர்.சத் விஷயங்களை பாடி பேரனுக்கு சொல்லி கொடுப்பாள். அவனும் அதை நன்றாக கேட்டு கடைபிடிப்பான்.இப்போது அவன் பஃபோஸ்ட க்ராடூயட்டின் டல்லாஸ் இல் படிக்கிறான்.வாரம் இரண்டு முறை மெயில் அனுப்புவான்.இரண்டு முறை போன் பேசுவான்.அவன் குரலை கேட்டாலே பங்கஜம்  சிலிர்த்து போவாள் .மருமகள் சுமா மாமியார் மீது அதிக பாசமும் மரியாதையும் கொண்டவள்.இவர்கள் இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் நல்ல செல்வாக்கு.கோவில் ,மற்றும் நல்ல நண்பர்கள் வீட்டிற்கு போய் வருவார்கள்.தினம் பிரபந்தம் சொல்லிக்கொடுப்பதில் தன்னுடைய சேவையை பங்கஜம் செய்வதில் ஆத்ம திருப்தி அடைகிறாள்.இப்படி இவர்கள் குடும்பம் ஆனந்தமாக ஸ்ரீரங்கத்தில்
போய்க்கொண்டிருக்கிறது. அதே போல் அவர்கள் பிள்ளை ரவியின் குடும்பமும் நல்ல நண்பர்களுடன் டென்வரில் சந்தோசமாக பொழுதை போக்குகிறார்கள்.இவர்கள் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு .எல்லோரும் இவர்கள் குடும்பத்தை ,உதாரணம்காட்டுவார்கள்.கடவுள் எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை.ஆனால் அந்த ரங்கநாதன் இவர்களுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறான்.பங்கஜம் தினம் மாலையில் காரோண -19 சீக்கிரம் போகவேண்டும் என்று அவளும் ,கணவரும் பெருமாள் ரங்கநாதனை மனமார பிரார்த்திப்பார்கள். பல உதவிகளை ,மக்களுக்கு உதவுவதில் இந்த தம்பதிகளுக்கு ஈடு அவர்கள் தான்.கொடுப்பதை யாரிடமும் சொல்லிக்கொள்வதை விரும்பாதவர்கள்.உலகத்தில் ஒவொருவற்கும் ஒவொவொரு நம்பிக்கை ,இந்த தம்பதிகளுக்கு ரங்கநாதன் மீதும் பாதுகா சஹஸ்ரம் மீதும் அளவு கடந்த நம்பிக்கை.அவன் அனுக்கிரஹம் இருந்தால் எந்த வியாதியும் யாரையும் அணுகாது என்று பரம  .இறை நம்பிக்கை .எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அழிந்து போனதில்லை.கடந்த மும்தரு மாதங்களாக இந்த தம்பதிகள் ரங்கநாதனை பிரார்த்திப்பது எல்லாம் இந்த கொடிய காரோண -19 மறைந்துவிட வேண்டும் என்பது தான்.வாசலில் கணவர் செருப்பு சப்தம் கேட்டு தன சிந்தனையை கலைத்தாள் பங்கஜம்.ரங்கராஜன் அன்பு மனைவியை பார்த்து இன்று மெயில் வந்ததா. பேரன் மெயில் வந்த விஷயமும் அவன் கேட்ட சாமான்களையும் அடுக்கினால் பங்கஜம்.ரொம்ப சந்தோசம் நாளைக்கு அனுப்பிவிடலாம். இப்படியாக அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாக ரங்கநாதன் அருளினால் போய்க்கொண்டுஇருக்கிறது ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய ஷேத்திரத்தில்.இறைவனொருவனை  தவிர தற்போது இந்த கொடிய நோயிலிருந்து  மருந்து கண்டுபிடிக்கும் வரை  வேறு யாரும் காப்பாற்ற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்த தம்பத்திகளுக்கு கதையின் நோக்கமும் அதுதான்

சுந்தரவல்லிராகவன்

No comments: