Tuesday, July 5, 2022

Tribute to Suzhal..

சுழல் நன்றாக சுழலுகிறது. சமீபத்தில் நான் அமசனில் பார்த்து ரசித்த சீரீஸ் .மிக அழகாக படமாக்கியிருந்தார்கள் .புஷ்கர் -காயத்ரி அருமையாக ,எழுதி உருவாக்கியுள்ளார்கள்.ஆரம்பம் முதல் 8 எபிசொட் வரை ,இயக்குனர்கள் ப்ரம்மா ,அனுசரண் . முருகையன் விறுவிறுப்பாக இயக்கியிருப்பதை பாராட்டுகிறேன்.நடிகர்கள் பார்த்திபன்,கதிர்,ஐஸ்வர்யா ராஜேஷ்,குமாரவேலு,மற்றும் பலர் திறமையாக நடித்து உள்ளார்கள் .முகேஸ்வரன் திறமையாக ஒளிப்பதிவை கையாண்டுஇருப்பது ,படத்தின் முக்கிய அம்சமாக நான் கருதுகிறேன்.இசை சாம் நன்றாக ,செய்துஇருக்கிறார்..சமீபத்தில் வந்த படங்களில் ,நல்ல செய்தியை மக்களுக்கு சொல்லியிருப்பதை பாராட்டுகிறேனா.பெண்கள் பாலியலில் சிக்கி தவிப்பதை ,சொல்லவும் முடியாமல் ,மெல்லவும் முடியாமல் ,இருப்பதை நந்தினி ,மற்றும் அவர் தங்கை நிலா திறம்பட ,படத்தில் அருமையாக செய்துள்ளார்கள்.பார்த்திபணை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை.கதிர்,ஸ்ரேயா ரெட்டி.பிரேம்குமார்,அதிசயம் ஆக நடித்தவர் எல்லோரும் மனதில் நிற்கும்படி செய்து விட்டார்கள். சூழல் நன்றாக சுழலும் என்பது என் ு.கருத்து கே.ராகவன் 5-7-22

No comments: