Thursday, February 22, 2024

Good one.

தனித்துப் போகிறான் மனிதன்... தவிக்கப் போகிறான்! ¶காலையில் எழுப்பிட அப்பா வேண்டாம் - alarm app இருக்கு! ¶நடைபயிற்சிக்கு நண்பன் வேண்டாம் - step counter இருக்கு! ¶சமைத்து தந்திட அம்மா வேண்டாம் - zomato, swiggy app இருக்கு! ¶பயணம் செய்ய பேருந்து வேண்டாம் - uber,ola app இருக்கு! ¶விலாசம் அறிய டீ கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம் -google map இருக்கு! ¶மளிகை வாங்க செட்டியார் தாத்தா கடைக்கும், அண்ணாச்சி கடைக்கும் போக வேண்டாம் - big basket இருக்கு! ¶துணி, மணிகள் வாங்க கடைத்தெரு போக வேண்டாம் -amazon , flipkart app இருக்கு! ¶நேரில் சிரித்து பேசிட நண்பன் வேண்டாம் - whatsapp, facebook இருக்கு! ¶கைமாறாக பணம் வாங்க பங்காளியும், அங்காளியும் தேவையில்லை - paytm app இருக்கு! ¶மற்றும் பல தகவலுக்கு நம்ம -google டமாரம் இருக்கு! ¶இப்படி தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... -app என்னும் ஆப்பு!!! ¶உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க! ¶விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.! சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்! ¶விழித்தெழு விடை கொடு..! ¶செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து ஒரு வலை பின்னுவோம்...!

No comments: