Thursday, October 6, 2022

Review of Ponniyinselvan.

பொன்னியின் செல்வன் நிறைகளும்,குறைகளும். என் கண்ணோட்டத்தில், மிக ஆவலோடு எதிர்பார்த்த பிரமாண்ட திரை ப் படம் பொன்னியின் செல்வன் படம் வெளி வந்து எட்டு தினங்களும் ஓடி விட்டது.சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ஆனந்த பட்டேன்.முதலில் நிறைவுகளை பதிகிறேன். அமரர் கல்கியின் கதா பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை த்தேர்வு செய்ததை பாராட்டுகிறேன்.கதையை ஆரம்பத்தில் ,சுருக்கமாக நாவல் படிக்காத இளம் ரசிகர்களுக்கு சொல்லியிருப்பது ,ஆரம்பமே ஆங்கில படங்களுக்கு மேல் காட்சி அமைந்து இருப்பது ரவி வர்மனின் ஒளிப்பதிவு திறமையை பாராட்ட வைக்கிறது.சண்டை காட்சிகள் ,குதிரைகளின் குளம்படி ஓசை பின்னணி இசை அமைப்பாளர் ரஹ்மானின் திறமையை பாராட்ட வைக்கிறது.பிரமாண்ட செட்களை பார்க்கும்போது ,தோட்டா தரணியை பாராட்ட வைக்கிறது.படத்தை திறம்பட எடிட் செய்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாந்தை பாராடவைக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக ,பல பேராலும் கைவிடப்பட்ட இக்கதை ,மணி ரத்தினம் ,மூலமாக வந்ததற்கு இயக்குனர் மணி ரத்னம் அவர்களை பாராடவைக்கிறது.எல்லா கத பாத்திரங்களும் ,திறம்பட நடித்து இருப்பதாய் பார்த்து பாரத வைக்கிறது. கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி,சரத்குமார்,முக்கியமாக திரிஷா ,ஐஸ்வர்யா ராய்.பிரமாதமாக நடித்துஉள்ளதை பாராட்டவேண்டும் .மாற்று இப்படத்தில் பங்கு பெட்ரா அணைத்து நடிகர்களையும் பாராட்டவேண்டும்.உரையாடல் ஜெயமோகன் அவர்களையும் பாராட்டவேண்டும்.ஜெயா ராமனை பாராட்டாமல் இருக்கமுடியாது. இப்போது குறைகளை பதிவு செய்கிறேன். வந்தியத்தேவன் ,ஆழ்வார்கடியானை ஏளனம் செய்யும் காட்சியை தவிர்த்து இருக்கலாம்,ஜெயமோகன் சிறந்த எழுத்தாளர்,இன்னும் சற்று நன்றாக எழுதியிருக்கலாம்..சண்டைக்காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை சற்று குறைத்து ஆழ்வார் கடியான் காட்சிகளை அமைத்து இருந்தால் கல்கியின் கதாபாத்திரம் மேலும் சிறப்பாக இருந்துஇருக்கும்.,எல்லா கதா பாத்திரங்களையும் திரையில் மூன்று மணிக்கு கொண்டு வருவது கடினம்.மொத்தத்தில் இந்த பிரமாண்ட தயாரிப்பு மணிரத்னம் அவர்களுக்கு வந்து திரையிலும் வந்து இருப்பது கல்கி என்ற மாமனிதருக்கு கொடுக்கும் மிகப்பெரிய காணிக்கை..எனது கணிப்பு இப்படத்தை ஒரு தடவை பார்க்கவேண்டும்.நாம் ஆங்கில படங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல .இப்படத்தின் மூலம் ரவிவர்மனுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பது உறுதி.என் மார்க் 7-5/10. அன்புடன். கே.ராகவன். 7-10-22 if there is any error kindly ignore.

No comments: