Sunday, March 19, 2023

Tribute to Muktha films 60 .758

முக்தா பிலிம்ஸ் 60 க்கு பாராட்டுக்கள் கடந்த ஒரு வருடமாக நான் இந்த குழுவில்உறுப்பினராக சேர்ந்து பதிவு செய்து வருகிறேன் .ஒவ்வொரு பதிவும் அருமை.குழுவில் இருக்கும் அணைத்து உறுப்பினர்களும் ,குழுவின் கட்டுப்பாடுகளுக்கு ,உட்பட்டு பதிவு செய்வதை பாராட்டாமல் இருக்கமுடியாது .நிர்வகித்து வரும் அன்பு சகோதரி மாயா ஸ்ரீனிவாசன் ,சகோதரர்கள் ரவி ,சுந்தர் அனைவரையும் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.சமீபத்தில் இந்த குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 75000 தண்டி மேலும் 2300 ஆகியதில் வியப்பு ஒன்றும் இல்லை.மறைந்த சகோதரர்கள் ராமஸ்வாமி ,ஸ்ரீனிவாசன் அவர்கள் படைத்த திரைப்படங்கள்.மக்களுக்கு அவர்கள் மேலிருந்த மதிப்பு ,நம்பிக்கை தான் இவற்றுக்கு எல்லாம் காரணம் என்றால் அது மிகையில்லை.ஒரு குழுவில் ,குறுகிய காலத்தில் இவ்வளவு உறுப்பினர்கண் சேர்ந்ததற்கு காரணம்,முக்தா பிலிம்ஸ் என்ற மாபெரும் ஸ்தாபனத்தின் ஸ்தாபகர் ராமஸ்வாமி மற்றும் அவர் சகோதரர் இயக்குனர் ஸ்ரீனிவாசன் அவர்களின் கடின உழைப்பு ,நேர்மை,ஒழுக்கம் தான் காரணம்.எல்லா உறுப்பினர்களும் பிரமிக்க தக்க வகையில் பதிவு செய்து நம் எல்லோரையும் அசர வைக்கிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியமில்லை.என் மனதில் எனக்கு நினைவில் வந்த நண்பர்களை இங்கு பதிவு செய்கிறேன்.எல்லா உறுப்பினர்களும் அருமையாக செய்கிறார்கள். என்னால் நினைவில் வருபவர்களை பதிவுசெய்ய ஆசை படுகிறேன். சௌந்தரம் ஸ்ரீனிவாசன், கோபாலகிருஷ்ணன் சுந்தரராமன்,ஸ்வாமிநாதன் ஸ்ரீதர்,ஆர்.சுந்தரம் ,ராமஸ்வாமி பாலசுப்ரமணியன்,ரவி கோபாலகிருஷ்ணன்,மாயா ஸ்ரீனிவாசன்,பேச்சிமுத்து சுடலைமுத்து,சாந்தி தேசிகன் அவர்களின் ஆர்வம் ,வேதா சங்கர் தணிகாசலம்,மற்றும் எண்ணற்றவர்கள்.இந்த குழுவின் எண்ணிக்கை பல மடங்கு பெருகவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.எனக்கு தெரிந்த சிற்றறிவில் இதை பதிவு செய்கிறேன்.பிழைகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் , ராகவன் 20-3-23

No comments: