Thursday, November 18, 2021

Kudos to Lawyer Parasuran.

மூத்த வழக்கறிஞர் பத்மவிபூஷன் பராசரனுக்கு அய்யப்ப ரத்னா விருது வழங்கி சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் கௌரவித்தது. சென்னை நவம்பர் 18: சனாதன தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் வாதாடி வெற்றிபெற்ற மூத்த வழக்கறிஞர் பத்மவிபூஷன் K.பராசரனுக்கு அய்யப்ப ரத்னா விருது வழங்கி, அவருடைய சேவையை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் பாராட்டி கௌரவித்தது. அயோத்தி ராமஜென்மபூமி வழக்கிலும், சபரிமலை கோவிலுக்கு இளம் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் இவருடைய சிறப்பான வாதங்களை தான் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை பாதுகாப்பு இயக்கம் தேசீய துணை தலைவர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, டாக்டர். ஜெய் சந்திரன், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் தேசீய பொதுச் செயலாளர் ஈரோடு ராஜன், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி அமைப்பு செயலாளர் துரைசங்கர், வடதமிழ்நாடு அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் பொருளாளர் நாகராஜ் ஆகியோர் பராசரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து, விருது வழங்கி வாழ்த்தி கௌரவித்தார்கள். சபரிமலை புனிதத்தை காத்து, கோடானுகோடி அய்யப்பபக்தர்களின் கண்ணீரை துடைக்க காரணமாக இருந்தவரும், அத்துடன், ஹிந்து கலாச்சாரம் மற்றும் கோவில் சம்பந்தமான பல்வேறு வழக்குகளில் சிறப்பாக வாதாடி சனாதன தர்மத்தை காத்தவருமாக வழக்கறிஞர் பராசரன் விளங்குகின்றார். ஆகவே அவருடைய மகத்தான சேவையை பாராட்டி அய்யப்ப ரத்னா விருதை வழங்கியதாக ஈரோடு ராஜன் குறிப்பிட்டார். He richly deserve the Bharat Ratna Award in the stricter sense of the purpose of Awards to protect Hindus faith atleast in Bharath.

No comments: