Sunday, September 26, 2021

Tribute to Thendral Magazine USA 680.

Tribute to Thendral on line Tamil Magazine USA 680. ஆன் லைன் அமெரிக்கா மாத இதழ் தென்றலுக்கு பாராட்டு. எனது முதல் அமெரிக்கா பயணத்தில் 2014 இல் ஏற்பட்ட அனுபவங்கள் மறக்கமுடியாது.பல நகரங்களை கண்டு கழித்தாலும் ,அமெரிக்காவில் ஒரு இரு நட்புவட்டத்தை கண்டு மகிழ்ந்தாலும் ..எல்லாவற்றிற்கும் மேலாக என்னை மிகவும் கவர்ந்தது ஒரு ஆன் லைன் மாத இதழ் தமிழில் மிக சிறப்பாக இயங்கி வருவது.. அருமையான பெயர் தென்றல் என்று தென்றல் காற்று உண்மையிலையே அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக படைக்கப்பட்டதை பார்த்து பெருமைப்பட்டேன். என் மகள் இந்த உன்னதமான பத்திரிகையை அறிமுக படுத்தி வைத்தாள் .எல்லா பகுதிகளும் அருமையாக ,அதில்இருப்பதை கண்டேன். என்நண்பர்கள் பெரும்பாலும் , விரும்பி ,படிப்பதை பார்த்து தரத்தின் தன்மையை உணர்ந்தேன்.தொடர்ந்து ஒவ்வொரு திங்களும் ,கடந்த 90 மாதங்களாக ஆன் லைனில் படித்து மகிழ்ந்து வருகிறேன்.என்னுடைய பல பதிவுகளையும் தென்றலில் பதிவு செய்து உள்ளேன்.சிறு கதை,நேர்காணல் ,மற்றும் பல நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடப்பது ,இந்தியாவில் நடப்பது எல்லாம் மிக அழகாக தென்றல் ஆசிரியர் ,மற்றும் அவர்கள் குழு கொண்டுவருகிறது.எனக்கு தெரிந்து இருபது வருடங்களுக்கு மேலாக இந்த தென்றல் காற்று சுகமாக அமெரிக்கா மண்ணில் தமிழை நேசிக்கும் இந்தியர்களுக்காக வீசிக்கொண்டிருகிறது.என்றால் வியப்பில்லை.எல்லா அம்சங்களும் தென்றலில் இருக்கிறது..இந்த பாராட்டு பதிவு என்னுடை ப்ளோகில் கடந்த 13 வருடங்களாக பதிவு செய்து வருகிறேன்.யார் எந்த துறையில் சிறப்பாக செயல் பட்டாலும் அவர்கள் யாராக இருந்தாலும் பாராட்ட தயங்கமாட்டேன்..இந்த வாரம் எனக்கு தென்றலை பாராட்ட வேண்டும் என்று தோன்றியது..தென்றல் மென் மேலும் இதே தரமான பணியை தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.காரணம் பதிப்பாளரின் இத்தனை வருடங்கள் உறுதுணை. அன்புடன் கே.ராகவன் பெங்களூரு www.ragavan-creativity.blogspot.com www.tumblr.com commonman write2ragavan.wordpress.com 27-9-21

No comments: