Wednesday, December 18, 2024

Singapore tour article 2.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் என் எட்டு வயது பேரன் ஓடி வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு, "எப்படி இருக்கேய்?" என்று ஆசையாக கேட்ட போது, சந்தோசம் அடைந்தேன். டாக்ஸியில் போகும் போது, அவன் ஸ்கூல், நண்பர்கள், பார்த்த இடங்கள் எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் என்னிடமும், என் மனைவியிடமும் பரிமாறிக் கொண்டான். கேட்கச் சந்தோசமாக இருந்தது. போகும் போது இரு மருங்கிலும் மிக அழகான வானளாவிய கட்டிடங்களும், கண்ணை பறிக்கும் வர்ணஜால மின் விளக்குகளும் மனதை கொள்ளை கொண்டது. கூடவே, பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா பஞ்சு அருணாசலம், இயக்குனர் முத்துராமன் நினைவுகளும் வந்தது. காரணம், அற்புதமான பாடலை "பிரியா" திரைப்படத்தின் மூலம் நம்மை மெய்மறக்க செய்தது. அக்கறை சீமை அழகினிலே, மனம் ஆட கண்டேன்; புதுமையலே மயங்குகிரியன் என்ற பாடலை ஜேசுதாஸ் பாடினார். "தாத்தா, நம்ம வீடு வந்தாச்சு," என்று என் பேரன் குரல் கேட்டவுடன், "பிரியா" படத்தில் இருந்து கிழே இறங்கி வந்தேன K.Ragavan 26-4-2010

No comments: