Wednesday, December 18, 2024

Singapore tour article 3.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை - 3 வீட்டின் உள்ளே நுழைந்தவுடன், மற்ற இரண்டு பேரன்களும் ஆசையாக ஓடிவந்து என் கையை பற்றிக் கொண்டு, "தாத்தா, நீ சிங்கப்பூர் வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்!" என்று சொன்னவுடன், உள்ளம் உவகையில் பொங்கியது. பிறகு மகளும், மருமகனும் வந்து என்னையும், மனைவியையும் விசாரித்து, சாப்பிட அழைத்தார்கள். ஏற்கனவே விமானத்தில் கொடுத்த உணவை உண்டதால், வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் வற்புறுத்தி கொஞ்சம் இனிப்பு சாப்பிட வைத்தார்கள். சாப்பிடாமலேயே நான் இனிப்பாக இருந்தேன். இரவு 11 மணிவரை, பேரன்கள் அவர்கள் ஆறுமாசம், சிங்கப்பூரில், எப்படி கழித்தார்கள் என்பதை கூறினார்கள். ஒருவன் சொன்னான், "தாத்தா, இந்த ஊரும் துபாய் மாதிரி நன்றாக இருக்கிறது. காலையில் நீ எங்கள் சாலைக்கு வரவேண்டும்" என்று அன்புடன் கட்டளை இட்டான். மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டேன். மறுநாள் அவர்களுடன் சாலைக்கு சென்றேன். மிக அழகிய கட்டிடங்களை, சிறுவர்களும், சிறுமியர்களும் பட்டாம் பூச்சி போல் போவதை பார்த்து, எனக்கு மறைந்த மக்கள் திலகம், 'படம் உலகம் சுற்றும் வாலிபன்' படமும், வி. ராமமூர்த்தியின் சிறந்த ஒளிப்பதிவும் நினைவில் வந்தது. "தாத்தா, பை!" என்று என் சிந்தனையைக் கலக்கியான் ஒரு பேரன். — கே.ராகவன் 3-5-2010

No comments: