Wednesday, December 18, 2024

Singapore tour article 8.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 8. ஒவ்வொரு நாளும் வித வித மான அனுபவங்களை நாம் முகரும் போது ,அறிவு வளர்கிறது. பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்து ,பழகி அவர்களின் ,அனுபவங்களையும் ,பார்த்தால் நாம் சாதித்து ,கொண்டிருக்கிறோம் ,என்று நினைக்கும் எண்ணம் பறந்து போய்விடும் என்பது உண்மை என்பதை ,நான் அனுபவ பூர்வமாக கடந்த வாரம் கண்டியன். கடந்த வாரம் ஒரு வெள்ளிகிழமை என் அருமை மகள் ,அப்பா இன்று ,உங்களையும் ,அம்மாவையும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல போகிரியன் என்றாள். எங்கே என்று கேட்டதற்கு அங்கு வந்து பாருங்கள் ,என்று முற்று புள்ளி வைத்து விட்டாள் சிறிது நேரம் சென்ற பின் என்னை ,சீனா டவுன் ,என்ற பிரசித்திபெற்ற ஸ்தலத்திற்கு அழைத்து சென்று ,பல நல்ல கடைகளை காண்பித்தாள். ..நான் கேட்டேன் ,இந்த கடைகளுக்கா ,என் ஆவலை துண்டினாய் என நான் கேட்க,அப்பா அவசர படவேண்டாம் . பொருத்திறேங்கோ இன்னும் ஐந்து நிமிடங்கள் ,என்று மேலும் என் ஆவலை ,அதிக படுத்தினாள். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ,நான் அன்ன லக்ஷ்மி ,என்ற உணவு சாலைக்கு ,குடும்பத்தாருடன் உள்ளே சென்றியன். என் மகளை பார்த்து ,இந்த உணவு சாலைக்க இவ்வளவு ,அமர்க்களம் என்று கேட்டீன் .அவளும் புன்முறுவலுடன் கொஞ்சம் பொறுங்கள் ,என்று மேலும் என் ஆவலை அதிக படுத்தினாள். (வளரும்.) K.Ragavan. 6-6-2010

No comments: