Wednesday, December 18, 2024

Singapore tour article 6.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை6. முத்திரை என்று சொன்னவுடன், எனக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கு தங்க அனுமதி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள என் பாஸ்போர்ட்டைப் பார்த்து உறுதி செய்தேன். அப்போது, ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி என்னை புலர்த்தியது. துபாயில் எனக்கு ஒரு முறை பெரிய ஷாப்பிங் மாலில் அறிமுகமான ஒரு இத்தாலி நாட்டவர், என் பெயரை சொல்லி அழைத்தார். ஒரே ஒரு முறை, கடந்த ஆண்டு துபாய் சிட்டி சென்டர் என்கிற மாலில் அவர் என்னிடம் வழி கேட்டார். அப்போது அவர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, ஒரு இடத்திற்கு போக வழி கேட்டார். நான் வழி கூறிவிட்டு, என்னைப் பற்றிய விவரங்களை அவரிடம் கூறி, என் முகவரி அட்டையை அவருக்கு கொடுத்தேன். அதில் இருந்த பெயரை அவர் நினைத்து, என்னை ப்ளாஸா சிங்கப்பூர் மாலில் அழைத்தார். உண்மையில், இது என்னை பிரமிக்கவைத்தது. நான் அவரை அவருடைய பெயரான கார்லோ முசோலி என்று அழைத்தவுடன், அவர் முகத்தில் புன்னகை பூத்தது. அவர் தன்னை அறிமுகப்படுத்தியபோது, நான் அவரிடம் சொன்னேன், “எனக்கு பிடித்த உங்கள் தேசத்தின் மறைந்த தயாரிப்பாளர் கார்லோ பாண்டி, எனக்கு பிடித்தவர். உங்கள் பெயர் கார்லோ என்பதால், எங்கு சந்தித்தாலும் உங்கள் பெயர் எனக்கு ஞாபகம் இருக்கும்.” அவர் என்னுடைய இந்த உரையை கேட்டதும், மிகுந்த சந்தோஷம் அடைந்தார். சிறிது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பல அனுபவங்கள் இந்த பயணத்தில் எனக்கு பரவசத்தை ஏற்படுத்தின. (வளரும்) கே. ராகவன் May 23, 2010

No comments: