இதில் பிழை இருந்தால் ,பொருட்படுத்தவேண்டாம்.
காயத்ரி ஜபம் இது ஒரு கற்பனைக்கதை.
அந்த ஆபீஸில் பதினைந்து வருடகாலமாக ,பெண் ஊழியர் யாரையும் எடுக்கவில்லை .திடிரென்று மேனேஜர் ரங்கஸ்வாமி ஒரு பெண் அந்தரங்க காரியதர்சியை போன வாரம் செலக்ட் பண்ணார் .அந்த புது ஊழியர் இன்று ஆபீஸில் ஜாயின் பண்ணுகிறார் .எல்லா ஊழியர்களும் ,ஆவலாக அந்த புது ஊழியரை ,எதிர் பார் த்து கொண்டிருந்தார்கள் .சரியாக 10 மணிக்கு அந்த புதிய பெண் ஊழியர் உள்ளே நுழைந்தார்.முதலில் அவள் கண்ணில் பட்டது கோபு தான்..அந்த ஆஃபிஸில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மாரடித்து கொண்டிர்ந்தான் ,வந்த பெண் , என் பெயர் காயத்ரி இன்னிக்கு மேனேஜர் காரியதர்சியாக இந்த ஆபீஸில் ரிப்போர்ட் பண்ணுகிறேன் மேனேஜர் ரூம் எங்குஇருக்கிறது .என் பெயர் கோபு ,நான் சீனியர் கிளார்க் ,அதோ அந்த ரூம்தான் மேனேஜர் ரூம் என்று காட்டினான் .தேங்க்ஸ் மிஸ்டர் கோபு ,குயிலினும் இனிய குரலில் சொல்லிவிட்டு மேனேஜர் ரூம் சென்றுவிட்டாள்.கோபு வின் மனதும் ,உடம்பும் ஒரு சந்தோஷத்தில் பட படைத்தது.உள்ளுக்குள் ,மேனேஜர் ரங்கஸ்வாமியின் ,செலக்க்ஷன் திறமையை பாராட்டினான்.அந்த ஆபீஸில் ,மொத்தம் இருபது பேர்கள் பணியாற்றுகிறார்கள் , எல்லோரும் ஆண்கள்.பெண் வாடை இல்லாத அந்த ஆஃபிஸில் இன்று தான் ஒரு அப்சரஸ் தேவலோகத்தில் இருந்து வந்தது போல் வந்தது எல்லோருக்கும் சந்தோசம் .கோபு டெஸ்பாட்ச்
கிளார்க் பட்டாபி இருவர் மட்டும் பிரமச்சாரி .பட்டாபியும்
காயத்ரியை ,பார்த்தவுடன் எங்கயோ ,போய்விட்டான்.அன்று ஆபீஸ் முடிந்தவுடன் கோபு நேராக ,வீட்டுக்கு வந்தான் .வழக்கம் போல் அவ்வளவு சீக்கிரம் ,வரமாட்டான்.. அவன் அம்மா ,கோபு ,என்னடா இன்று சீக்கிரம் வந்துட்ட .ஒன்னும் இல்லை ,அம்மா ,இன்னிக்கு
கோவிலுக்கு போகலாம்னு ,வந்து டிரஸ் மாத்திண்டு போகலாம்னு
வந்தேன் .அம்மா, மழை தான் வரப்போரது .சரி டிபன் சாப்பிட்டு
விட்டு போ .தனக்கு பிடித்த அனுபவம் புதுமை பாடலை மெதுவாக பாடிகொண்டே , முகம் கழுவிக்கொண்ட பிறகு டிபன் ,சாப்பிட்டு ட்ரிம் ஆக டிரஸ் செய்துகொண்டு ,நேராக பக்கத்து தெரு பிள்ளையார் ,கோவிலுக்கு வந்தான். மனதார ,வேண்டிக்கொண்டான் .வேண்டுதல் ,வேறு ஒன்று இல்லை .முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ,தனக்கு ஒரு நல்ல ,மனைவி ,காயத்ரி போல வரணும்னு தான்.மறு ,நாள் முதல் ஆபீஸ் ,முற்றிலும் ,மாறிவிட்டது பத்து நிமிடம் லேட்டா வரவர்கள் ,சீக்கிரமே ,வந்து விழிமேல் விழி வைத்து ,கயத்ரிக்காக
காத்துக்கொண்டிருந்ததில் ,ஏதும் வியப்பில்லை .பெண் வாடை
இல்லாத அந்த ஆபீஸ் இப்போது மிகவும் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது.ஒரு வாரம் ,மிக வேகமாக ஓடியது .அன்று ஆபீஸில் காயத்ரி ,ப்யூன் பங்காருவிடம் இரண்டு டிக்கெட் ,மத்தியானம் சினிமாக்கு புக் பண்ணச்சொல்லி கொண்டிருக்கும்
போது , கோபு, கேட்டு விட்டான்.பங்காரு விடம் இருந்து ,எந்த தியேட்டர்,என்னிக்கு விவரங்களை ,கோபு
பக்குவமாக அவன் வாயிலிருந்து பிடுங்கிவிட்டான்.குறிப்பிட்ட நாள் அன்று கோபு ,நல்லா டிரஸ் பண்ணிக்கொண்டு ,அம்மா நான் வெளியே போய்விட்டுவருகிறேன்..அம்மா,இன்னிக்கு காயத்ரி ஜபம் ,ஜபம் பண்ணிட்டு போ .அப்படியாம்மா இப்ப பண்ணுகிறேன்
அவன் ஜபித்தது காயத்ரி பெயரை .கொஞ்சநேரம் ஜபித்துவிட்டு ,கிளம்பி நேராக காயத்ரி புக் பண்ண தியேட்டருக்கு வந்தான்.அவன் காலையில் இருந்து பிராத்தனை ,செய்ததெல்லம் ,அகஸ்மாத்தாக ,காயத்ரி புக் பண்ண சிநேகிதி வரவில்லை என்றால் ,நாம் தலை காட்டினால் அவள் கண்டிப்பாக ,டிக்கெட்டை ,வேஸ்ட் ,செய்யாமால் ,தன்னை அழைத்து செல்வாள் என்று. மணியாகியும் ,காயத்ரி வரவில்லை. கடைசியில் ,காயத்ரி குரல் கேட்க ஆசையுடன் ,பார்த்த கோபுவுக்கு ,அதிர்ச்சியாகி விட்டது.காயத்ரியுடன் ஒரு அழகான ,இளைஞன் ,சாரி,காயத்ரி ,இன்று ஒரு மேஜர் ஆபரேஷன் ,அதனால் லேட் ஆகிவிட்டது .என்று அவளை அணைத்தவாறு ,வந்து கொண்டிருந்தான். கோபுவுக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
உடனே வீட்டுற்கு வந்து ,டிரஸ் மாற்றிக்கொண்டு ,ஒரு வெள்ளி டம்பளரில் ,ஜலமெடுத்து கொண்டு ,உண்மையாகவேய நிஜ காயத்ரி ஜபம் 1008 செய்தான்.இப்போது அவன் மனது நிம்மதியாக இருந்தது.
கே.ராகவன்
,
No comments:
Post a Comment