இது ஒரு கற்பனைக்கதை .தவறுகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம்.
கிருஷ்ண ஜெயந்தி.
வெகு நேரமாகியும் ,ரயில் வரவில்லை .கைக்கடிகாரத்தை பார்த்தான், கிருஷ்ணா.அவன் வந்து கிட்டத்தட்ட ,ஒரு மணி நேரமாகியும் .இரண்டு டி ,குடித்தும் பொழுது மெதுவாக ஊர்வது போல் இருந்தது அவனுக்கு..பெங்களூரிலிருந்து ,ஜெயந்தி வரவை எதிர் பார்த்து காத்திருந்தான் .மைசூரு ஸ்டேஷன் அப்படியே ,அழகாக ,பராமரிக்கப்பட்டு ,நன்றாக இருந்தது.கிருஷ்ணா மைசூரு விட்டு ,பெங்களூர் போய் சுமார் பதினைந்து வருடமாகிவிட்டது. பெரிய கம்பெனியில் ,நல்ல உத்தியோகம் ,வெளி நாடுகளுக்கு ,அடிக்கடி பயணம் ,மனைவி ஜெயந்திக்கு ,நல்ல பாங்கில் வேலை. கிருஷ்ணாவின் சொந்த ஊர் பெங்களூரு. மைசூரில் , நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் இருந்து படித்து பட்டம் பெற்று ,பெங்களூரில் வேலை கிடைத்தவுடன் தாய் தந்தையார் கூட ஒன்றாக இருந்தான்.பிறகு ,பெங்களூரில் ஜெயந்தியை ,கல்யாணம் செய்து கொண்டான். ஜெயந்தியின் பெற்றோர்கள் ,பெங்களூரில் வசித்து பிறகு ,அவள் அப்பாவிற்கு துபாயில் ஒரு பெரிய ஆயில் கம்பெனியில் வேலை கிடைத்து அங்கு ஆறு வருடங்கள் வேலை பார்த்து விட்டு , மைசூரில் வந்து செட்டில் ஆகிவிட்டார்.நண்பன் ஒருவன் கல்யாணத்தில் கலந்து கொண்டு நேராக மைசூரு ஸ்டேஷன் வந்து ஜெயந்திக்காக ஸ்டேஷனில் காத்திருந்தான்.ஜெயந்திக்கு வேலை இருந்ததால் ,
கல்யாணத்திற்கு ,அவனுடன் மண்டியா வர முடியவில்லை. திடிரென்று பெல் ,சப்தம் கேட்டு ,,கற்பனையில் இருந்து
விடுபட்டான் .நாலாவது ,கம்பார்ட்மெண்டில் இருந்து ,ஜெயந்தி கை காட்டினாள். இருவரும் ஒரு ஆட்டோ ,பிடித்து ,ஜெயலட்சுமிபுரம் ,அவள் பெற்றோர்கள் வீட்டை அடைத்தார்கள்.மாமனார் ,ஸ்ரீனிவாசன் ,வாசலிலேயே ஆசையாக வரவேற்றார். மாமியாரும் வாங்கோ என்று இருவரையும் வரவேற்றாள் ..ஜெயந்தி , அம்மா ரயில் கொஞ்சம் லேட்டா ,வந்தது. அம்மா, பரவாயில்லை பெட்டியை வைத்துவிட்டு டிபன் சாப்பிட வாங்கோ. .இருவரும் உள்ளே சோபாவில் ,உட்கார்ந்தார்கள்.அவர்கள் மைசூர் வந்து வீடு கட்டி இரண்டு வருடம் ஆகிறது.லேட்டஸ்ட் ,டிசைன் வீடு.டிபன் சாப்பிட்டுவிட்டு ,பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.பிறகு ஸ்ரீனிவாசன் ,கிருஷ்ணா ,வேலை ,பற்றிக்கேட்டு சந்தோஷப்பட்டார்.மாமியாருக்கு ,மாத்திரம் மனசுலே ஒருகுறை ,அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகி குழந்தை இல்லை என்ற ஏக்கம் தான்.பிளான் பண்ணுகிறார்கள் ,என்று ஸ்ரீனிவாசன் சொன்னதை கேட்டு சமாதானம் அடைந்தாள்.எப்போது போன் ,பேசினாலும் மகளிடம் ஜாடை மாடையாக ,குழந்தை பற்றி சொல்லுவாள்.எத்தனயோ தம்பதிகள் பத்து வருஷம் கழித்து குழந்தை பெற்றிருப்பதையும் பார்த்திருக்கிறாள்.சிந்தனையிலிருந்து ,விடுபட்டு , மாமியார் ஜானகி. ,ஜெயந்தி,நீங்கள் போன வருஷம் கிருஷ்ணா ஜெயந்திக்கு வந்ததுதான்.நாளைக்கு ,கிருஷ்ணா ஜெயந்தி ,மைசூரு கோலாகலமாக இருக்கும் .கொரோனா இருப்பதால் நடமாட்டம் ஜாஸ்தி ,இல்லை.இன்று , சமையல்காரர் வந்து எல்லா பட்சணங்களை பண்ணி வைத்து விட்டு போனார்.நிறைய ஸ்வீட்ஸ் ,பண்ணியிருக்கிறேன் .ஜெயந்தி,எதுக்கும்மா ,அவ்வளவு. கொஞ்சம் பண்ணியிருக்கலாமே .இந்த பண்டிகை நமக்கு முக்கியம் .இன்னும் கிராண்ட் ஆக பண்ணனும்னு அப்பா சொன்னார் ஆசார்யன் அனுகிரஹத்திலும் .பெருமாள் ஆசிர்வாதத்திலும் ,இந்த ஆத்துக்கு .க்ரிஷ்ணனோ ,அல்லது ராதா வோ அடுத்தவருடம் வரணும் னு நான் வொண்டி கொப்பல் பெருமாளுக்கு இன்னிக்கு ஒருஅர்ச்சனை பண்ணிவிட்டு வந்தேன் .சரி அம்மா,,என்று நாணினாள் ஜெயந்தி.மறுநாள் பண்டிகை மிக கோலாகலமாக ,நாலு ,விருந்தினர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மறுநாள் காலை இருவரும் கிளம்பி ,நேராக பஸ்ஸ்டாண்ட் வந்து ,பஸ் பிடித்து பெங்களூரு வந்து சேர்ந்தார்கள் .கிருஷ்ணா அப்பா அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம் அவர்கள் இந்த வருடமும் ,கிருஷ்ணா ஜெயந்திக்கு ,மைசூரு போனது.அடுத்த வருடமாவது ,தங்களுக்கு பேரன் பிறப்பான் என்று என்னும்போது ,எங்கிருந்தோ கோவில் மணி ஒலித்தது.இறை நம்பிக்கை ,இருந்தால் எல்லாம் அவன்
அனுகிரஹத்தினால் கிடைக்கும் என்று இந்த பெற்றோர்களுக்கு தெரியும்.கிருஷ்ணா ஜெயந்தி பண்டிகை சுபமாக முடிந்தது இந்த குடும்பத்தாருக்கும் மற்றும் எல்லா குடும்பத்தினருக்கும் சுபிக்ஷம் வருவதற்கும் ,காரோண நம்மை விட்டு போவதற்கும்.
கே.ராகவன்
No comments:
Post a Comment