Saturday, May 8, 2010

Singapore Article. 4.

.சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 4. இன்றோடு ,நான் சிங்கப்பூர் வந்து 63 நாட்கள் ஓடிவிட்டதை நினைத்து பார்கையில் ,கால தேவன் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பதை உணர்ந்தேன்  பார்த்து கண்டு கழித்த ,பெரிய பெரிய வியாபார ஸ்தலங்கள் ,உண்ட உணவு சாலைகள் ,பயணம் செய்த ரயில் ,போக்குவரத்து ஊர்திகள் ,மற்றும் சிங்கப்பூர் நகருக்கே அணிகலனாக விளங்கும் செண்டோச தீபகற்பம் எல்லாம் ஒரு முறை மனதை வட்டமிட்டது.இந்த நகரில் ,என்னை மிகவும் கவர்ந்தது மக்களின் சுறுசுறுப்பு ,சுத்தம்மாக வைத்திருப்பது பணிவாக வழி விடுவது .கடைகளில் சாமான் வாங்கினால் சில்லறை ,பாக்கியை கொடுப்பது. மே 6 ம்தேதி முக நூல் நண்பர் கோவிந்தராஜன் அவர்களின் சந்திப்பு ,ஒரு நல்ல மனிதரின் நட்பு கிடைத்த பெருமையை அளித்தது. தொலை காட்சிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்து மகிழ்ந்தியன். மாலைல் நானும் ,மனைவியும் வாக்கிங் போகும் போது வரிக்குதிரை கோடுகள் ,எல்லையை கடக்கும் போது ,வாகனங்கள் ,நிறுத்தி நமக்கு வழி விடும் பண்பு என்னை மிகவும் ஈர்த்தது. இங்கே சட்டம் ,ஒழுங்குக்கு ,கட்டுப்பாடு இருக்கிறது.ஒரு நண்பர் சொன்னார் ,சிறிய தேசமாக இருப்பதினால் ,இப்படி கட்டுபாடாக ..வைத்திருக்க முடிகிறது என்று.அதை நினைத்து யோசிக்கையில் ,எங்கிருந்தோ வானொலியில் இருந்து ,உன்னால் முடியும் தம்பி ,என்ற பாடல் ஓலித்தது . (வளரும்) கே.ராகவன்

No comments: