Saturday, May 15, 2010
SingaPore Payanakkaturai. 5.
சிங்கப்பூர் பயணக்கட்டுரை 5
நான் எதற்காக யோசித்தேன் என்றால் ,ஒரு சின்ன தேசம் ,இவ்வளவு ,அழகாக,ஒழுங்காக .செயல் படும்போது ஏன் நம்முடைய தேசம் ,மிக பெரிய அளவில் வல்லரசாக செயல்படகூடாது என்பது தான்.நம்மால் அது சாத்தியம்,ஏன் என்றால் நம்மிடம் மக்கள் பலம் உள்ளது. தம்பி உடையான் ,படைக்கு அஞ்சான் ,என்ற பழமொழி போல் ,எல்லா சக்திகளும் ஒருமித்து கட்டு பாடுடன் ,செயல் பட்டால் நம்மால் சாதிக்க முடியும். இந்தியன் ,கால் படாத தேசமே ,இல்லை என்று இன்று பரவலாக பேசபடுவது உண்மை என்றால் பெரிய வல்லரசாகவும் நம்மால் முடியும்.மனம் இந்த எண்ணத்துடன் ,அசை போடுகை யில் பின்னால் ,யாரோ என்னை அழைத்தார்கள்.தினசரி சந்திக்கும் நண்பர் ,அன்புடன் என்னை தன்,வீட்டிற்கு ,தேனீர் அருந்த அழைத்தார்.ஏனென்றால் ,என் பயணம் முடிய இன்னும் சில தினங்களே இருந்ததால்.. விருந்தோம்பலில் தமிழர்க்கு நிகர் ,யாரும் இல்லை என்று எல்லோரும் கூறுவது,உண்மை என்று அறிந்து மகிழ்ந்தேன். இல்லத்திற்கு வந்து ,மனைவிடம் சொன்னவுடன் ,அகமகிழ்ந்தாள் .நம்மவர்கள் எங்கிருந்தாலும் முத்திரை பதித்துவிடுவார்கள்என்று. (வளரும் )
கே.ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment