Saturday, May 1, 2010
Singapore Payanakkaturai. 3.
சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 3.
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் ,மற்ற இரண்டு பேரன்களும் ,ஆசையாக ஓடிவந்து என் கையை பற்றிக்கொண்டு ,
தாத்தா,நீ சிங்கப்பூர் வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்,என்று சொன்னவுடன் ,உள்ளம் உவகையில் பொங்கியது.
பிறகு மகளும், மருமகனும் வந்து ,என்னையும் ,மனைவியும் விசாரித்து , சாப்பிட அழைத்தார்கள். ஏற்கனவே விமானத்தில்
கொடுத்த உணவை உண்டதால் ,வேண்டாம் என்று சொன்னேயன் ஆனால் அவர்கள் வற்புறுத்தி கொஞ்சம் இனிப்பு சாப்பிட
வைத்தார்கள். சாப்பிடாமலேயே நான் இனிப்பாக இருந்தியன் . இரவு 11 மணிவரை ,பேரன்கள் அவர்கள் ஆறுமாசம் ,
சிங்கப்பூரில் ,எப்படி கழித்தார்கள் என்பதை கூறினார்கள். ஒருவன் ,சொன்னான் ,தாத்தா ,இந்த ஊரும் துபாய் மாதிரி நன்றாக இருக்கிறது.. காலையில் நீ எங்கள் சாலைக்கு ,வரவேண்டும் என்று ,அன்பு கட்டளை இட்டான். மறுக்க முடியாமல் . ஒப்புக்கொண்டேன் . மறுநாள் அவர்களுடன் ,
சாலைக்கு சென்றேன் .மிக அழகிய கட்டிடம் ,சிறுவர்களும் ,சிறுமியர்களும் ,பட்டாம் பூச்சி போல் போவதை பார்த்து ,
எனக்கு மறைந்த மக்கள் திலகம் ,படம் உலகம் சுற்றும் வாலிபன் படமும் ,வி ராமமூர்த்தியின் சிறந்த ஒளிப்பதிவும் நினைவில் வந்தது.
தாத்தா , பை என்று என் சிந்தனயை க் கலைத்தான் ஒரு பேரன். (வளரும்.)
கே.ராகவன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment