பொயட்ரி இன் ஸ்டோன் விஜயகுமார் நேர்காணல் மிக சுவாரசியமாகவும் ,அருமையாகவும் இருந்தது..உயர் அதிகாரியாக பணியாற்றினாலும் ,அவரின் ,சிற்பம் ஓவியக்கலை ஈடுபாடு பாராட்டுக்குரியது. அதற்கு மூல காரணமாக இருந்த கல்கி அவர்களின் பொன்னியன் செல்வனை அவர் நினைவு கூர்வது ,அவரின் தன்னடக்கத்தை காட்டுகிறது. விடா முயற்சியுடன் ,பல அரிய சிலைகளை தாய் மண்ணிற்கு மீட்டது நாம் செய்த பாக்கியம் ..கோவில்களிலும் ,சிலை திருட்டை ,தடுக்க அலாரம் ,போன்ற உபகரணங்களை பொருத்தலாம் முயற்சி வேண்டும்
என்ற அவரின் குறையை ,அரசாங்கம் போக்க வேண்டும்.விஜயகுமாரின் இந்த பணி, மேன்மெலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு தென்றல் ,நேர் காணலும் பாராட்டுகுரியது ..
கே.ராகவன்
பெங்களுரு, இந்தியா
No comments:
Post a Comment