Saturday, June 19, 2010

SingaPore Payanakkaturai. 10..

சிங்கப்பூர் பயணக்கட்டுரை  10.. கால தேவன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அவன் பாட்டுக்கு இயங்கி கொண்டிருப்பான் என்பது எவ்வளவு பெரிய உண்மை என அனுபவ பூர்வமாக ,அறிந்தியன். நான் தாயகம் ,திரும்பும் தருணம் நெருங்கி கொண்டிருந்தது. என் மகள் ,அப்பா நீங்கள் கிளம்புவதற்கு முன் யூனிவேர்சல்  ஸ்டூடியோ பார்த்து விட்டு போக வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டள் நானும் நண்பர்கள் மூல்யமாக ,அந்த பிரம்மாண்டமான அமெரிக்க திரை பட ஸ்தாபனத்தை .பற்றி கேள்வி பட்டிருந்தியன். ஊருக்கு புறபடுவதுக்கு முன் ,அங்கு விஜயம் செய்தியன். உலகில் ,மிக பெரிய திரை பட ஸ்தாபனங்களில் ஒன்று யூனிவேர்சல் ஸ்டுடியோஸ் .அவர்கள் தயாரித்த ,பிரம்மாண்ட ,படங்களை அங்கு வைத்திருந்தார்கள்.நானும் சில படங்களை பார்த்து ரசித்து இருக்கிரியன்.அங்கு என்னை மிகவும் கவர்ந்தது ,அவர்களின் ஒளிப்பதவு ,மற்றும் தந்திர காட்சிகள் அமைக்கும் முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது .ஒரு தினம் ,பேர குழந்தைகளுடன் ஆனந்தமாக செலவழித்தது மனதுக்கு ,நெகிழ்ச்சியை ஊட்டியது. இல்லம் திரும்பி ,அன்றியா நேரம் நல்ல உபயோகமான முறையில் செலவழிந்தது ,என சந்தோஷ பட்டியன். ஜூன் ஒன்றாம் தேதி ,சிங்கப்பூர் விமான நிலையம் வந்தடைந்தியன். அன்றும் ஆச்சரியம் ,ஏர்  இந்தியா குறித்த காலத்தில் ,கிளம்பி ,குறித்த காலத்தில்,சென்னை வந்தடைந்தது. எண்பத்தி ஐந்து தினங்கள் ,என் சிங்கப்பூர் பயணம் முடிந்தது.வெளியே வந்தவுடன் நம் ஒழுங்கு முறைகள் ,சற்று மனதை நெருடியது.நம் நாட்டில் எல்லாம் இருக்கிறது ,ஒழுங்கு முறைகள் ,முக்கியமாக சாலை வீதிகள் ,சரியான முறையில் பின்பற்றபடுவதில்லை என்பது என் மனதை சற்று நெருடியது.என்ன இருந்தாலும் இது நம் தேசம் ,என்கின்ற ஆதங்கமும் கூடவே எழுந்தது. இந்த கட்டுரை எனக்கு தெரிந்த சிற்றறிவில் கூறியுள்ளேன் .பிழைகள் இருந்தால் பொறுக்கவும் . நன்றி. (முற்றும்.)
K.Ragavan.

No comments: