சிங்கப்பூர் பயணக்கட்டுரை . 9.
உணவு சாலைக்குள் நுழைந்தவுடன் ,புன்முறுவலுடன் ஒருவர் எங்களை ,இனிமையாக வரவேற்றார். நாங்கள் எவ்வளவு பேர் ,என்று விசாரித்து ,உட்கார்வதற்கு இருக்கைகளை காட்டினார்.ஆண்களும் ,பெண்மணிகளும் ,புன்முறுவலுடன் சுறுசுறுப்பாக ,எல்லோரையும் உபசரித்து அவரவர்களுக்கு ,என்ன ,என்ன ,வேண்டும் என்று கேட்பதை பார்க்க ஆனந்தமாக இருந்தது.எங்களுக்கு தேவையானதை ஒருவர் கொண்டு வந்தார்.அப்போதும் என் மகள் அந்த சாலையில் ,என்ன ஒரு புதுமை என்பதை சொல்லாமலே இருந்தது எனக்கு மேலும் சுவாரசியத்தை ,தூண்டியது.அவரிடமே நான் நேரிடையாகவே கேட்டேன்.ஐயா ,இந்த உணவு சாலையில் எதோ ஒரு புதுமை இருப்பதாக சொல்கிறார்கள் அதை தாங்கள் கூற முடியுமா என வினவியதற்கு . அதற்கு அவர் ,கொடுத்த விளக்கத்தை கேட்டு,நான் ஸ்தம்பித்து போனியன்அவர் சொன்ன தகவல் அங்கு பணி .புரிகிற இரு பாலர்களும்,சுயமாக சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்கள்.எல்லோரும் பட்டதாரிகள் ,வேறு வேறு துறையில் பணி புரிந்து ,ஓய்வு வேளைகளில் ,அங்கு வந்து இந்த பணியை செய்கிறார்கள் என்பது. மேலும் இன்னொரு அதிசயம் என்னவென்றால் ,அங்கு உணவுக்கு கட்டணம் கிடையாது .அவரவர்கள் உண்ட பின் , தங்களுக்கு பிடித்தமான ,கட்டணத்தை செலுத்தலாம். படித்த பட்ட தாரிகள் ,கெளரவம் பார்க்கும் இந்த காலத்தில் ,வேலைக்கு சென்று மாலை வேளைகளில் இந்த பட்டதாரிகள் ,சாப்பிட்ட தட்டை எடுத்து செல்வது ,பாரட்ட வேண்டிய ஒன்று.இப்போது என் மகள் என்னை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தாள். அப்பா இப்போது புரிந்ததா ,இந்த சாலையின் மகிமைஎன்று ,அந்த புன்முறுவல் கேட்பது போலிருந்தது. (வளரும்.)
No comments:
Post a Comment