Monday, June 7, 2010

Story Athirstam.

அதிர்ஷ்டம்.
எப்போதும் ஆறு மணிக்கு ஆபிசில் இருந்து , திரும்பும் முத்து .,இன்னும் வரவில்லையே என்று கோதை தவித்தாள்.
மகன் மீது அவ்வளவு பாசம் ,ஒரே மகன் அல்லவா.சரி ,இன்னும் கொஞ்சநேரம் பார்த்து விட்டு ,அவன் நண்பன் ராமு வீட்டுக்கு போகலாம் ,என முடிவு செய்து கொண்டிருந்த,சமயத்தில் ,வாசலில் செறுப்பு சப்தம் கேட்டது.
வந்து பார்த்தவள் முகத்தில் சந்தோசம் ,வந்தது முத்து தான் .
கோதை.ஏம்பா ,இன்னிக்கு இவ்வளவு லேட்.
முத்து.அம்மா, நான் கதை எழுதுவது உனக்கு தெரியும் இல்லியா .
கோதை.ஆமாம்.
முத்து.அது விசயமாக ஒரு பிலிம் டிரெக்டோரை .பாத்துட்டு வரேன்.
கோதை.என்ன ,சொன்னாரு ,உன் கதை பிடிச்சு இருக்கா
.முத்து.அடுத்த வாரம் வர சொன்னாரு. கோதை.ரொம்ப சந்தோசம்.,சாப்பிடலாம் வா ,என மகனை அழைத்தாள். முத்துவுக்கு ,ஒரு பெரிய கதாசிரியன்,வசனகர்த்தாவாக வர வேண்டும் என்ற தணியாத ஆசை
ரொம்ப வருசமாக அவன் இதயத்தின் அடித்தளத்தில் இருந்துவந்தது.ஆனால் அவன் எழுதிய ஒரு கதையும் போணியாகவில்லை.
நாம் ஏன் இப்படி சொன்னால் அதிர்ஷ்டம் வராது ,என்று தன் கதையை ஒரு டோரேக்டோர் விரும்புகிறார் ,என்று பொய் சொன்னால்
அத்ர்ஷ்டம்வராதா என்று நம்பினான்.முத்து வசித்த இடத்தில் குடிக்க ,தண்ணிர் கொஞ்சநேரம் தான் வரும் .அதனால் ,கோதை தள்ளியிருக்கும்
பொது குழாய்க்கு ,தண்ணிர் பிடிக்க செல்வாள். அந்த குழாயில் தண்ணிர் பிடிக்க ,சுமார் இருபது பெண்கள் வருவார்கள்.வம்புக்கு ,கேட்பானேன்.
ஒரு விடுமுறை தினத்தில் , அம்மா,நான் இன்று அந்த டைரக்ட ஐயாவை பார்த்து விட்டு வருகிறேன் ,என்று பைல் உடன் வெளியே புறப்பட்டான்.ஒவ்வொரு
வாரமும் இதே போல் செய்வான்.நாட்கள் ,மெதுவாக நகர்ந்தது. அன்று கோதை தண்ணீர் பிடிக்க பக்கத்து குழாய் சென்றாள்.வழக்கம்போல் ,அவள் தன்
மகன் முத்து ,கதையை எடுத்துக்கொண்டு ,டைரக்டர், பாக்க போனதை பெருமையாக எல்லோரிடமும் சொன்னாள்.கோதை ,கூடிய சீக்கிரம் ,நீ கார் ,பங்களா
வாங்கபோறாய் ,எங்களை ஞாபகம் வச்சுபயில்லே

கோதை. அது எப்படி உங்களை எல்லாம் மறப்பேன் .நீங்கள் எல்லாம் என் நண்பர்கள் ,இன்று முத்து அந்தடைரக்டர் பாக்க போய் இருக்கான் .
அன்று நிஜமாகவே ,வளப்பம் பொருந்திய அந்த இடத்தில ஷூட்டிங் எடுக்கலாமா என்று பார்க்க வந்த பிலிம் டைரக்டர் ,கோதையும்,அவள் நண்பர்களும்
பேசியதை கேட்டு ,வியப்பில் ஆழ்ந்து ,நாம் முத்து வை பார்க்க வேண்டும் ஒரு நாள் என்று மனதுக்குள் முடிவு செய்தா ர்.அதற்கு காரணம்இவ்வளவு தாய் குலமும்
முத்துவின் கதையை விரும்புவது தான். . அடுத்தவிடுமுறை நாளும் ,வழக்கம் போல் முத்து பொய் சொல்லிவிட்டு கதையை எடுத்து கொண்டு புறப்பட்டான்.
அவன் போன சிறிது நேரத்தில் கோதை வீட் டு வாசலில் ஒரு கார் வந்தது. அதிலிருந்து இறங்கினார் ,ஷூட்டிங் பாக்க வந்த டைரக்டர்.
டைரக்டர்.அம்மா, நான் ஒரு சினிமா டைரக்டர் ,உங்கள் மகன் கதையை பற்றி ,இந்தஊரில் உள்ள தாய் மார்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டு .முத்து வின் கதையை வாங்கலாம் ,என்று வந்தேன்.இந்தாருங்கள் அட்வான்ஸ் .
கோதை. மன்னிக்கணும் ஐயா. முத்து இன்று வாக்கு அளித்தபடியே பழைய டைரக்டர் கு கதையை கொடுக்க போயிருக்கிறான். என்னை மன்னித்துவிடுங்கள். \
டைரக்டர். பரவாஇல்லை. எனக்கு அதிர்ஷ்டம் இல்லை . வருகிறேன்.
அவர் போன உடன் முத்து வழக்கம் போல் உள்ளே நுழைந்தான்.
கோதை.முத்து ஒரு நிமிஷம் நில்லு.உனக்கு திருஷ்டி சுத்த வேணும்.இப்போது யாரோ ஒரு டைரக்டர் உன் கதை கேட்டு வந்தார் .நான் நீ வேறு ஒரு டிறேக்டோருக்கு வாக்குகொடுத்து இருக்காய் ,அதனால் இன்று கதை கொடுக்க போய் இருக்கிறாய் என்று சொன்னியன்.
வாக்கு தான் முக்கியம் ,இல்லியா ,என்று மகனை பார்த்து கேட்டாள்.முத்து கை ய ல் இருந்த கதையை கீழே வைத்தான் .அம்மா ,என்றுகத்தினானே தவிர வேறு ஒன்றும் , அவனால் சொல்ல முடியவில்லை. அவன் கதை அவனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.
உண்மையிலயே ,அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது.ஆனால் அது அவன் துர் அதிர்ஷ்டத்தினால் போய் விட்டது.
K.Ragavan.

No comments: