Friday, April 16, 2010
Enney Moziyin Magimai.
Ragavan Krishnamachary என்னே மொழியின் மகிமை. ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியின் மீதுபற்றுதல் வைக்க வேண்டும்.பாசம் வைக்க வேண்டும் .பரிவு வைக்க வேண்டும்.தாய் மொழியை தவிர வேறு மொழிகளை கற்பதில் தவறில்லை. அவரவர் மொழியின் மூலமாக ,அவர்களுடன் பேசினால் அன்பு உண்டாகிறது ,பாசம் உண்டாகிறது .இனிய நட்பு உண்டாகிறது.நெருக்கம் உண்டாகிறது.பாரத தேசம் மொழிகளில் ஒரு பெரிய மஹா சமுத்திரம் .எல்லா மொழிகளும் கிளை நதிகள் .பாரத தேசம் என்னும் சமுத்திரத்தில் சங்கமம் ஆகிறது. பிற மொழியினரையும் சமமாக ,பாவித்து ,அனைத்து ,அரவணைத்து போகும் உயர்ந்த குணம் தமிழனிடம் இருப்பதில் வியப்பில்லை.அதற்கு உதாரணம் சென்னை ,மா நகரம்.மொழி வெறியாக மாரிவிட்டால் வேற்றுமை பாரட்ட தோன்றுகிறது ..தாய்மொழி ,நமது பிறப்பு உரிமை ,தேசத்தை மொழிகளின் மூலமாக பாதுகாக்கவேண்டியது இந்திய குடிமகனான நம் எல்லோருடிய தலை யாய கடமை.இதில்தமிழன் முதலிடம் வகிப்பான்என்பதில் எள்ளளவும் ஐயமிலை .வாழ்க இந்தியா ,வளர்க தமிழர் பண்பாடு ,ஒற்றுமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment