Saturday, April 24, 2010

Singapore Tour Article. 2.

safety Measures

In Bengaluru city ,Karnataka state in India recent reports says no fatality in the past 164 days shows the Administration and the civic body BBMP controlled the virus is appreciable.On the expectation of the third wave India is ready to face the threat , and keeping children vaccination in mind is laudable.How ever people should not  be excited and restrict their movementout side  and only for essential they should go.

With this Precautionary measures We can manage the third wave.
K.Ragavan.

spore 10.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை  10.. கால தேவன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அவன் பாட்டுக்கு இயங்கி கொண்டிருப்பான் என்பது எவ்வளவு பெரிய உண்மை என அனுபவ பூர்வமாக ,அறிந்தியன். நான் தாயகம் ,திரும்பும் தருணம் நெருங்கி கொண்டிருந்தது. என் மகள் ,அப்பா நீங்கள் கிளம்புவதற்கு முன் யூனிவேர்சல்  ஸ்டூடியோ பார்த்து விட்டு போக வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டள் நானும் நண்பர்கள் மூல்யமாக ,அந்த பிரம்மாண்டமான அமெரிக்க திரை பட ஸ்தாபனத்தை .பற்றி கேள்வி பட்டிருந்தியன். ஊருக்கு புறபடுவதுக்கு முன் ,அங்கு விஜயம் செய்தியன். உலகில் ,மிக பெரிய திரை பட ஸ்தாபனங்களில் ஒன்று யூனிவேர்சல் ஸ்டுடியோஸ் .அவர்கள் தயாரித்த ,பிரம்மாண்ட ,படங்களை அங்கு வைத்திருந்தார்கள்.நானும் சில படங்களை பார்த்து ரசித்து இருக்கிரியன்.அங்கு என்னை மிகவும் கவர்ந்தது ,அவர்களின் ஒளிப்பதவு ,மற்றும் தந்திர காட்சிகள் அமைக்கும் முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது .ஒரு தினம் ,பேர குழந்தைகளுடன் ஆனந்தமாக செலவழித்தது மனதுக்கு ,நெகிழ்ச்சியை ஊட்டியது. இல்லம் திரும்பி ,அன்றியா நேரம் நல்ல உபயோகமான முறையில் செலவழிந்தது ,என சந்தோஷ பட்டியன். ஜூன் ஒன்றாம் தேதி ,சிங்கப்பூர் விமான நிலையம் வந்தடைந்தியன். அன்றும் ஆச்சரியம் ,ஏர்  இந்தியா குறித்த காலத்தில் ,கிளம்பி ,குறித்த காலத்தில்,சென்னை வந்தடைந்தது. எண்பத்தி ஐந்து தினங்கள் ,என் சிங்கப்பூர் பயணம் முடிந்தது.வெளியே வந்தவுடன் நம் ஒழுங்கு முறைகள் ,சற்று மனதை நெருடியது.நம் நாட்டில் எல்லாம் இருக்கிறது ,ஒழுங்கு முறைகள் ,முக்கியமாக சாலை வீதிகள் ,சரியான முறையில் பின்பற்றபடுவதில்லை என்பது என் மனதை சற்று நெருடியது.என்ன இருந்தாலும் இது நம் தேசம் ,என்கின்ற ஆதங்கமும் கூடவே எழுந்தது. இந்த கட்டுரை எனக்கு தெரிந்த சிற்றறிவில் கூறியுள்ளேன் .பிழைகள் இருந்தால் பொறுக்கவும் . நன்றி. (முற்றும்.)

spore 9

சிங்கப்பூர் பயணக்கட்டுரை . 9. உணவு சாலைக்குள் நுழைந்தவுடன் ,புன்முறுவலுடன் ஒருவர் எங்களை ,இனிமையாக வரவேற்றார். நாங்கள் எவ்வளவு பேர் ,என்று விசாரித்து ,உட்கார்வதற்கு இருக்கைகளை காட்டினார்.ஆண்களும் ,பெண்மணிகளும் ,புன்முறுவலுடன் சுறுசுறுப்பாக ,எல்லோரையும் உபசரித்து அவரவர்களுக்கு ,என்ன ,என்ன ,வேண்டும் என்று கேட்பதை பார்க்க ஆனந்தமாக இருந்தது.எங்களுக்கு தேவையானதை ஒருவர் கொண்டு வந்தார்.அப்போதும் என் மகள் அந்த சாலையில் ,என்ன ஒரு புதுமை என்பதை சொல்லாமலே இருந்தது எனக்கு மேலும் சுவாரசியத்தை ,தூண்டியது.அவரிடமே நான் நேரிடையாகவே கேட்டேன்.ஐயா ,இந்த உணவு சாலையில் எதோ ஒரு புதுமை இருப்பதாக சொல்கிறார்கள் அதை தாங்கள் கூற முடியுமா என வினவியதற்கு . அதற்கு அவர் ,கொடுத்த விளக்கத்தை கேட்டு,நான் ஸ்தம்பித்து போனியன்அவர் சொன்ன தகவல் அங்கு பணி .புரிகிற இரு பாலர்களும்,சுயமாக சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்கள்.எல்லோரும் பட்டதாரிகள் ,வேறு வேறு துறையில் பணி புரிந்து ,ஓய்வு வேளைகளில் ,அங்கு வந்து இந்த பணியை செய்கிறார்கள் என்பது. மேலும் இன்னொரு அதிசயம் என்னவென்றால் ,அங்கு உணவுக்கு கட்டணம் கிடையாது .அவரவர்கள் உண்ட பின் , தங்களுக்கு பிடித்தமான ,கட்டணத்தை செலுத்தலாம். படித்த பட்ட தாரிகள் ,கெளரவம் பார்க்கும் இந்த காலத்தில் ,வேலைக்கு சென்று மாலை வேளைகளில் இந்த பட்டதாரிகள் ,சாப்பிட்ட தட்டை எடுத்து செல்வது ,பாரட்ட வேண்டிய ஒன்று.இப்போது என் மகள் என்னை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தாள். அப்பா இப்போது புரிந்ததா ,இந்த சாலையின் மகிமைஎன்று ,அந்த புன்முறுவல் கேட்பது போலிருந்தது.  (வளரும்.)

Spore 8.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 8. ஒவ்வொரு நாளும் வித வித மான அனுபவங்களை நாம் முகரும்  போது ,அறிவு வளர்கிறது. பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்து ,பழகி அவர்களின் ,அனுபவங்களையும் ,பார்த்தால் நாம் சாதித்து ,கொண்டிருக்கிறோம் ,என்று நினைக்கும் எண்ணம் பறந்து போய்விடும் என்பது உண்மை என்பதை ,நான் அனுபவ பூர்வமாக கடந்த வாரம் கண்டியன். கடந்த வாரம் ஒரு வெள்ளிகிழமை என் அருமை மகள் ,அப்பா இன்று ,உங்களையும் ,அம்மாவையும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல போகிரியன் என்றாள். எங்கே என்று கேட்டதற்கு அங்கு வந்து பாருங்கள் ,என்று முற்று புள்ளி வைத்து விட்டாள் சிறிது நேரம் சென்ற பின் என்னை ,சீனா டவுன் ,என்ற பிரசித்திபெற்ற ஸ்தலத்திற்கு அழைத்து சென்று ,பல நல்ல கடைகளை காண்பித்தாள். ..நான் கேட்டேன் ,இந்த கடைகளுக்கா ,என் ஆவலை துண்டினாய் என நான் கேட்க,அப்பா அவசர படவேண்டாம் . பொருத்திறேங்கோ இன்னும் ஐந்து நிமிடங்கள் ,என்று மேலும் என் ஆவலை ,அதிக படுத்தினாள். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ,நான் அன்ன லக்ஷ்மி ,என்ற உணவு சாலைக்கு ,குடும்பத்தாருடன் உள்ளே சென்றியன். என் மகளை பார்த்து ,இந்த உணவு சாலைக்க இவ்வளவு ,அமர்க்களம் என்று கேட்டீன் .அவளும் புன்முறுவலுடன் கொஞ்சம் பொறுங்கள் ,என்று மேலும் என் ஆவலை அதிக படுத்தினாள். (வளரும்.) கே.ராகவன்

spore 7

சிங்கப்பூர் பயணக்கட்டுரை.7 சமீபத்தில் குடும்பத்தாருடன் ,புகழ் பெற்ற சிங்கப்பூர் ,பறக்கும் இடத்துக்கு  சென்றேன் இதில் என்ன ஒரு விசேசம் என்றால் 160 மீட்டர் உயரத்தில் போய்கொண்டே நகரின் எல்லா இடங்களையும்  பார்த்து கண்டு களிக்கலாம். மிக அற்புதமாக இந்த காட்சிஇருந்தது.பன்னாட்டு ,மக்களையும் அங்கே சந்திக்க முடிந்தது.மேலே போகும் போது புகை படம் எடுத்தோம். ஒரு சிறிய தேசத்தை ,வியாபார ,மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து போகும் படி தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மையமாக வைத்தசிங்கப்பூரின் ,சைகையை மனதுக்குள் எண்ணி வியந்தேன். ஒரு நாட்டின் வளப்பத்துக்கு முக்கிய காரணம் ,வர்த்தக,சுற்றுலா ,மக்களின் ஒத்துழைப்பு ,அவசியம் வேண்டும் என்பதை சிங்கத்தின் வாயிலாக அறிந்தியன் .மற்றும் ஒரு நிகழ்ச்சியும் என்னை மிகவும் ஈர்த்தது.பேருந்தில் பயணம் செய்யும் போது உடல் நிலை பாதிக்கபட்டவர்கள் வந்தால் ,வண்டியோட்டி ,தம்முடை இடத்தில இருந்து ,இறங்கி அவரை உள்ளே அழைத்து வந்து அமரவைத்து ,மிண்டும் அவர் இறங்கும் இடத்தில அவரை இறக்கி விடுகிறார்.இதில் மனித நியமத்தை கண்டியன்இப்போது எல்லாம் இந்த மனித நியமத்தை ,எங்கே காண முடிகிறது ,என்ற வினாவும் கூடவே என்னுள் ,எழுந்தது. கே.ராகவன். (வளரும்.)

Spore 6

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 6 முத்திரை என்று சொன்னவுடன் ,எனக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் ,இங்கு தங்க அனுமதி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள என் பாஸ்போர்ட் பார்த்து உறுதி செய்து கொண்டியன். மற்றும் ,ஒரு எதிர் பாரத நிகழ்ச்சி என்னை புல்லரிக்க வைத்தது. துபாயில் எனக்கு ஒரு முறை பெரிய ஷாப்பிங் மாலில் ,அறிமுகமான ஒரு இத்தாலி தேசத்தவர் ,என் பெயரை சொல்லி அழைத்ததுதான். ஒரே ஒரு முறை போன வருடம் ,துபாய் சிட்டி சென்டர் என்கிற மாலில் அவர் என்னிடம், வழி கேட்டார் .அப்போது பேசுகையில் அவர் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு ,ஒரு இடத்திற்கு போக வழி கேட்டார். நான் வழி கூறிவிட்டு ,என்னை அறிமுக படுத்திகொண்டு என் முக வரி அட்டையை அவரிடம் கொடுத்தியன் அதில் இருந்த பெயரை ,ஞாபகம் வைத்து ,என்னை ப்ள்சா சிங்கப்பூர் மாலில் அழைத்தது ,உண்மையிலயே பிரமிக்க வைத்தது.நானும் அவரை ,அவர் பெயர் கார்லோ முசோலி ,என்று அழைத்தவுடன் ,அவர் முகத்தில் புன்ன கை பூத்தது s அவர் தன்னை அறிமுகபடுத்தி கொண்டபோது ,நான் அவரிடம் சொன்னியன் ,எனக்கு பிடித்த உங்கள் தேசத்து ,மறைந்த தயாரிப்பாளர் கார்லோ பாண்டி ,எனக்கு பிடித்தவர் உங்கள் பெயரும் கார்லோவில் இருப்பதால் நாம் எங்கு சந்தித்தாலும் உங்கள் பெயர் எனக்கு ஞாபகம்,இருக்கும் என்று சொன்னியன்.அவர் பெயரை நான் அழைத்ததும் ,அவருக்கும் மிகவம் சந்தோசம் சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு ,கிளம்பினியன் .பல அனுபவங்கள் ,இந்த பயணத்தில் ,என்னை பரவசபடுதியது.  (வளரும் ) கே.ராகவன் May.23.010

Spore 5.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை 5 நான் எதற்காக யோசித்தேன் என்றால் ,ஒரு சின்ன தேசம் ,இவ்வளவு ,அழகாக,ஒழுங்காக .செயல் படும்போது ஏன் நம்முடைய தேசம் ,மிக பெரிய அளவில் வல்லரசாக செயல்படகூடாது என்பது தான்.நம்மால் அது சாத்தியம்,ஏன் என்றால் நம்மிடம் மக்கள் பலம் உள்ளது. தம்பி உடையான் ,படைக்கு அஞ்சான் ,என்ற பழமொழி போல் ,எல்லா சக்திகளும் ஒருமித்து கட்டு பாடுடன் ,செயல் பட்டால் நம்மால் சாதிக்க முடியும். இந்தியன் ,கால் படாத தேசமே ,இல்லை என்று இன்று பரவலாக பேசபடுவது உண்மை என்றால் பெரிய வல்லரசாகவும் நம்மால் முடியும்.மனம் இந்த எண்ணத்துடன் ,அசை போடுகை யில்  பின்னால் ,யாரோ என்னை அழைத்தார்கள்.தினசரி சந்திக்கும் நண்பர் ,அன்புடன் என்னை தன்,வீட்டிற்கு ,தேனீர் அருந்த அழைத்தார்.ஏனென்றால் ,என் பயணம் முடிய இன்னும் சில தினங்களே இருந்ததால்.. விருந்தோம்பலில் தமிழர்க்கு நிகர் ,யாரும் இல்லை என்று எல்லோரும் கூறுவது,உண்மை என்று அறிந்து மகிழ்ந்தேன். இல்லத்திற்கு வந்து ,மனைவிடம் சொன்னவுடன் ,அகமகிழ்ந்தாள் .நம்மவர்கள் எங்கிருந்தாலும் முத்திரை பதித்துவிடுவார்கள்என்று. (வளரும் ) கே.ராகவன்

Spore 4

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 4. இன்றோடு ,நான் சிங்கப்பூர் வந்து 63 நாட்கள் ஓடிவிட்டதை நினைத்து பார்கையில் ,கால தேவன் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பதை உணர்ந்தேன்  பார்த்து கண்டு கழித்த ,பெரிய பெரிய வியாபார ஸ்தலங்கள் ,உண்ட உணவு சாலைகள் ,பயணம் செய்த ரயில் ,போக்குவரத்து ஊர்திகள் ,மற்றும் சிங்கப்பூர் நகருக்கே அணிகலனாக விளங்கும் செண்டோச தீபகற்பம் எல்லாம் ஒரு முறை மனதை வட்டமிட்டது.இந்த நகரில் ,என்னை மிகவும் கவர்ந்தது மக்களின் சுறுசுறுப்பு ,சுத்தம்மாக வைத்திருப்பது பணிவாக வழி விடுவது .கடைகளில் சாமான் வாங்கினால் சில்லறை ,பாக்கியை கொடுப்பது. மே 6 ம்தேதி முக நூல் நண்பர் கோவிந்தராஜன் அவர்களின் சந்திப்பு ,ஒரு நல்ல மனிதரின் நட்பு கிடைத்த பெருமையை அளித்தது. தொலை காட்சிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்து மகிழ்ந்தியன். மாலைல் நானும் ,மனைவியும் வாக்கிங் போகும் போது வரிக்குதிரை கோடுகள் ,எல்லையை கடக்கும் போது ,வாகனங்கள் ,நிறுத்தி நமக்கு வழி விடும் பண்பு என்னை மிகவும் ஈர்த்தது. இங்கே சட்டம் ,ஒழுங்குக்கு ,கட்டுப்பாடு இருக்கிறது.ஒரு நண்பர் சொன்னார் ,சிறிய தேசமாக இருப்பதினால் ,இப்படி கட்டுபாடாக ..வைத்திருக்க முடிகிறது என்று.அதை நினைத்து யோசிக்கையில் ,எங்கிருந்தோ வானொலியில் இருந்து ,உன்னால் முடியும் தம்பி ,என்ற பாடல் ஓலித்தது . (வளரும்) கே.ராகவன்

Avatar

sPORE 3

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 3. வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் ,மற்ற இரண்டு பேரன்களும் ,ஆசையாக ஓடிவந்து என் கையை பற்றிக்கொண்டு , தாத்தா,நீ சிங்கப்பூர் வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்,என்று சொன்னவுடன் ,உள்ளம் உவகையில் பொங்கியது. பிறகு மகளும், மருமகனும் வந்து ,என்னையும் ,மனைவியும் விசாரித்து , சாப்பிட அழைத்தார்கள். ஏற்கனவே விமானத்தில் கொடுத்த உணவை உண்டதால் ,வேண்டாம் என்று சொன்னேயன் ஆனால்  அவர்கள் வற்புறுத்தி கொஞ்சம் இனிப்பு சாப்பிட வைத்தார்கள். சாப்பிடாமலேயே நான் இனிப்பாக இருந்தியன் . இரவு 11 மணிவரை ,பேரன்கள் அவர்கள் ஆறுமாசம் , சிங்கப்பூரில் ,எப்படி கழித்தார்கள் என்பதை கூறினார்கள். ஒருவன் ,சொன்னான் ,தாத்தா ,இந்த ஊரும் துபாய் மாதிரி நன்றாக இருக்கிறது.. காலையில்  நீ எங்கள் சாலைக்கு ,வரவேண்டும் என்று ,அன்பு கட்டளை இட்டான். மறுக்க முடியாமல் . ஒப்புக்கொண்டேன் . மறுநாள் அவர்களுடன் , சாலைக்கு சென்றேன் .மிக அழகிய கட்டிடம் ,சிறுவர்களும் ,சிறுமியர்களும் ,பட்டாம் பூச்சி போல் போவதை பார்த்து , எனக்கு மறைந்த  மக்கள் திலகம் ,படம் உலகம் சுற்றும் வாலிபன் படமும் ,வி ராமமூர்த்தியின்  சிறந்த ஒளிப்பதிவும்  நினைவில் வந்தது. தாத்தா , பை என்று என் சிந்தனயை க் கலைத்தான்  ஒரு பேரன். (வளரும்.) கே.ராகவன்.

Avatar

Spore 2.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 2. சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ,வெளியைவந்தவுடன் எனது எட்டு வயது ,பேரன் ஓடிவந்து என் கைகளை ,பற்றிக்கொண்டு ,  எப்படி இருக்கேய் ,என்று ஆசையாக கேட்ட போது ,சந்தோசம் அடைந்தேன். டாக்ஸியில்  போகும் போது ,அவன் ஸ்கூல் ,நண்பர்கள் ,பார்த்த இடங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் ,என்னிடமும் ,என் மனைவியடமும் பரிமாறி கொண்டான்.கேட்க சந்தோசமாக இருந்தது.போகும் போது இரு மருங்கிலும் ,மிக அழகான வானளாவிய கட்டிடங்களும் ,கண்ணை பறிக்கும் வர்ண ஜால மின் விளக்குகளும் மனதை கொள்ளை கொண்டது. கூடவே,பாடலாசிரியர் ,தயாரிப்பாளர் ,வசனகர்த்தா .பஞ்சு அருணாசலம், .இயக்குனர் ,முத்துராமன் நினைவும் வந்தது .காரணம் ,அற்புதமான பாடலை ,பிரியா ,திரை படத்தின் மூலம் நம்மை ,மெய் மறக்க செய்தது தான்.அக்கறை  சீமை அழகினிலே  ,மனம் ஆட கண்டேனே.புதுமையலே மயங்குகிரியன் ,என்ற பாடல் ,ஜேசுதாஸ் பாடியது.தாத்தா  ,நம்ம வீடு ,வந்தாச்சு ,என்று என் பேரன் ,குரல் கேட்டவுடன் ,பிரியா படத்தில் இருந்து கிழே இறங்கி வந்தேன். ((வளரும்) கே.ராகவன்

No comments: