Sunday, April 18, 2010

Singapore Tour Article.1.

pril 19, 2010 By Krishnamachari Ragavan எனது சிங்கப்பூர் பயண கட்டுரை. மார்ச் 7 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செக்கிங் எல்லாம் முடித்து, விமானத்தில் வந்து அமர்ந்தேன். குறித்த காலத்தில் விமானம் புறப்பட துவங்கியது. பக்கத்தில் இருந்த என் மனைவிக்கு காதில் லேசாக முணுமுணுத்தேன், "இன்று சென்னையில் மழை பொழியும்" என்று. மனைவியின் முகத்தில் வியப்பு, காரணம் காலை செய்திகளில் ரமணன் மழை பெய்யும் என்று அறிவிக்கவில்லை. நான் சொன்னதற்கு அவர் கேட்டாரோ, "எதற்கு?" என்றால், நாங்கள் பயணம் செய்யும் விமானம் ஏர் இந்தியா என்பதுதான், மனைவிக்கு மறந்து விட்டது. எப்போதும் சற்று கால தாமதமாக கிளப்பும் விமானம் என்பதே அந்த காரணம். இருப்பினும் வெளிநாடு பயணங்களுக்கு நான் முதலில் கொடுக்கும் இடம் இந்த விமானத்துக்குதான், காரணம் அதுவே அப்படிப்பட்ட பிரியமான நாட்டைச் சேர்ந்த விமானம். என் மனம், விமானத்தின் இறக்கைகளை விட வேகமாக துடிக்கத் தொடங்கியது. காரணம், என் மூன்று பேரகுழந்தைகளை ஆறு மாத காலத்திற்கு பிறகு காணப் போவது தான். K.Ragavan

No comments: